Monday, July 23, 2012

இன்றய வெள்ளக்கடற்கரை பள்ளிவாசல்


வெள்ளக்கடற்கரை பள்ளிவாசல்


ஷாரூக்கான் - பிரபல ஹிந்தி நடிகர். இலங்கை விஜயத்திற்கான புரோக்கிரேம் செலவு 13 கோடி. அவரிற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தொகை 3 கோடி.

ஷாகிர் நாயக் - பிரபல மேடை பிரச்சாரகர். இலங்கை விஜயத்திற்கான புரோக்கிரேம் செலவு 27 கோடிஅவரிற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தொகை 12 கோடி.

பிரித்தி ஜிந்தா - பிரபல கவர்ச்சி நடிகை. இலங்கை விஜயத்திற்கான புரோக்கிரேம் செலவு 9 கோடிஅவரிற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தொகை 5 கோடி

ந்த மௌலவி” - மண்கும்பான் பள்ளிவாசல் கொத்பா விஜயத்திற்கான செலவு 2400 ரூபா. அவரிற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட கூலி 1000 ரூபா.

இது ஊகங்களில் சொல்லும் வார்த்தைகள் அல்ல. நிஜங்களின் நிழலில் உட்கார்ந்து எழுதும் வார்த்தைகள். மௌலவியை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றி வந்து மீண்டும் பழைய இடத்தில் கொண்டு சென்று விட 1200 ரூபா வரை அறவிடப்படுகிறது. அவரின் மதிய உணவிற்கு 200 ரூபா. ஜும்மாஹ் பிரசங்கம் நிகழ்த்தி தொழுகை நடாத்த 1000 ரூபா. மொத்தம் 2400 ரூபா.

இது தான் இன்றைய மண்கும்பான் பள்ளிவாசலின் நிலை. நாநூறு  ரூபாய்க்கு கீலி மீன் பிடித்து அதனை விற்று வாழ்க்கையை ஓட்டும் இந்த ஏழைகளை சுரண்டும்................ இவர்கள்.

 கடந்த ஐந்து வாரங்களாக கொத்பா நடக்கவில்லை. காரணம் பள்ளிவாசல் ட்ரஸ்டியிடம் பணமில்லை. இருந்து விட்டு ஒரு முறை ஜும்மா நடக்கும். அதுவும் பணமிருந்தால்............................................ஜியாரத் தரை மட்ட மக்கபட்டு இது ஒரு மஸ்ஜித் ஆக வர வேன்டும்...அதற்கு செலவளிக்கும் பணத்தைய் தீன்க்காக செலவளிதல் நல்லது...

அன்பின் புலம்பெயர்ந்த, புலம்பெயராத யாழ் முஸ்லிம் உறவுகளே இது பற்றி ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம். பள்ளிவாசலிற்கு டைல்ஸ் பிடிப்பதில் உள்ள அக்கறை மண்கும்பான் குழந்தைகளிற்கு மதரஸா நடத்துவதில் ஏன் வர மறுக்கிறது. நாம் யாரை ஏமாற்றுகிறோம்.

No comments:

Post a Comment