Friday, July 27, 2012

ஷரீஅத் சட்டம்




ஷரீஅத் சட்டம் என்றால் என்ன என்று கேள்வி கேட்டாலே  , அது கடுமையான குற்றவியல் சட்டங்களை கொண்டது ,  அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்துவராது  என்ற விளக்கங்கள்தான் பல பேர்களிடம் இருந்து  பதிலாக கிடைக்கிறது .

ஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைகளுக்கு எதிரானது . மிகவும் தூரமானது .

இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன .  அதாவது  7 குற்றங்களுக்கு  சில அறிஞர்களும் , 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும்   கூறுகிறார்கள் .



ஆனாலும் இந்த குற்றங்களுக்கு தண்டனை தரப்பட வேண்டுமானால்  உறுதியான ஆதாரங்களும் , தகுந்த சாட்சிகளும்  வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும் .

இஸ்லாமிய சட்டங்களை குறை கூறுவோர் இது பற்றி மிக குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர் . அதிகமானோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்கள் சில சதிகளின் வாயிலாக இஸ்லாமிய சட்டங்களை கொடூரமான சட்டங்களாக மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் .அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் கொடுமையான தண்டனைகளை மட்டுமே வழங்க கூடிய ஒரு தொகுப்பு எனவும் நிறுவ முயல்கிறார்கள் .

மாறாக இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப , சிவில் , சர்வதேச சட்டங்கள் என தொடாத பகுதிகளே இல்லை .

இந்த சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது . மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்து செல்லும் நெகிழ்வுத்தன்மையை அது கொண்டுள்ளது .

தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைக்களுக்கும் , சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது .

ஆண்கள்,பெண்கள்,முதியவர்கள்,சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது .

மிக முக்கியமாக சமூகத்தில் பலகீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது கவனமாக பாதுகாக்கிறது .

அந்த வகையில் பெண்களும் சிறுவர்களும் அந்த சலுகைகளை பெறுகிறார்கள் .ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் .

இஸ்லாமிய சட்டனகளை ஒழுங்காக அமுல் படுத்தப்படாத சமூகங்களில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது ? . பெண்கள் புன்படுத்தப்படுகிரார்கள் அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது . இன்று வரை அது நடந்து கொண்டுதான் இருக்கிறது .

இஸ்லாமிய சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . இன்னும் சொல்லப்போனால் ஆண்களைவிட பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன .

வாழ்வதற்கான உரிமை , சுதந்திரம் , ஆரோக்கியம் , சுசார்பு , நம்பிக்கை , அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள் , வேலைசெய்வதற்கான உரிமை, தனக்கு சொந்தமானவைகளை தனதாக்கிகொள்ளும் உரிமை,ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படுகின்றன .

குடும்பவியல் சட்டங்களை எடுத்துக்கொண்டால் அல்லாஹ் வாரிசு சட்டங்களை அழகாக வகுத்து வழங்கியுள்ளான் . இதனால வர்ரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது .இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது .

அவமரியாதை , ஒருசார்பு ,அநீதி ஆகியவை இஸ்லாமிய சட்டத்தில் கிடையாது .

திருமண உறவுகளை எடுத்துக்கொண்டால் , கணவன் மனைவி ஆகிய இருபாலார்க்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான , சட்டப்பூர்வமான உரிமைகள் ,இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்த சமூகத்திலும் நாம் காணக்கிடைக்காதவை .அது இருவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது . அவர்களின் குழந்தைகள் நல்லமுறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது .

இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தாலே போதும் .இது இஸ்லாமிய சட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மனித கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன .காவல்துறையினரின் உதவி இல்லாமல் அதனை அமுல்படுத்துவது கடினமான ஒன்று.

இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை .இஸ்லாமிய சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பபியல் சட்டங்களை முஸ்லிம்கள் நியாயமாக பேணி வருகிறார்கள் . வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தடையின்றி கிடைக்கிறது .

அல்லாஹ்வின் தூதார்(ஸல்) அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது .அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள் .

இந்த சட்டங்களை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் கூறியதில்லை

அசைக்கமுடியாத நம்பிக்கை வந்துவிட்டால் மக்கள் அதனை தானாகவே அமுல்படுத்துவார்கள் .யாரும் நிர்பந்திக்க தேவை இல்லை .

அனைத்தையும் அறிந்த , அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான் .ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிருவப்பட்டுவிட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்துவிடும் .

இன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாத்தின் சட்டந்தின்பால் திரும்புகின்றன .இது ஏன் என்று மேற்குலகம் வியந்து தன்னையே கேட்டுக்கொள்கிறது . இந்த கேள்விக்கு விடை மிக எளிதானது .

அது

அவர்கள் காலனியவாதிகள் ,பாராளுமன்றங்கள் , சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திபார்த்துவிட்டார்கள் . இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமிய சட்டம் வழங்கும் நீதிக்கு பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்துக்கொண்டார்கள் .

ஏன்  அவர்கள் தோற்றுப்போய்விட்ட சட்டனகளைஎல்லாம் விட மிகச்சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின்பால் திரும்பக் கூடாது ?

No comments:

Post a Comment