| Abeer Qasim Hamsa - When she was child |
பெயர்களிற்கு மாற்றமான நடத்தையுடைய மனிதர்களை நாம் கண்டுள்ளோம். ஸ்டீபன் டேல் கிறீனும் அவ்வாறானவர்களில் ஒருவனே. கிறீன் எனும் பசுமை அவன் உள்ளத்தில் ஒரு போதும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் ஊரான மிட்லாண்டில் வளர்ந்தவன் அவன். பல கீழ்தரமான நடத்தைகள் உடையவன். டென்வரில் உயர்கல்வியை முடித்தவன். எப்படியோ ஒழுக்க சான்றிதலை போலியாக தயாரித்து 2003ல் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தான். லைட் இன்பன்ட்ரி காலாட்படை பிரிவில் முதல் பட்டாலியனில் பயிற்ச்சியை முடித்து வெளியேறினான். 2005 ல் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டான்.
அபீர் ஹம்ஸா. ஈராக்கின் தென் பிரதேசமான மஹ்மூதியாவில் அவள் இல்லம் அமைந்திருந்தது. காலையில் உழைத்து மாலையில் செலவு செய்யும் சராசரி ஈராக்கிய குடும்பம். இதிலிருந்து சுமார் 15-20 மீட்டர் தொலைவில் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சோதனை சாவடி இருந்தது. அதில் தான் டேல் கிறீன் கடமையில் இருந்தான். சக சிப்பாய்களுடன்.
02.
அபீர் ஹம்ஸா ஒரு மணிப்புறா. அஹமட் (1996), முஹம்மட் (1998) எனும் இரு சகோதரர்களுடனும் ஹாதில் (1999) எனும் சகோதரியையும் உறவாக கொண்டவள். ஹாசீம் ஹம்சா ரஷீத் அல் ஜனபி இவளின் அன்புத் தந்தை. அரசாங்க உருளைகிழங்கு சேமிப்பகத்தில் காவலாளி. தாயின் பெயர் பஹ்ரியா தாஹா முஹ்ஸீன்.
தாம் வளர்த்து வந்த மாடுகளிற்கு உணவளிக்க செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது சோதனை சாவடி இராணுவத்தினர் தன்னை கண்கொட்டாமல் பார்ப்பதும், அங்கங்களை சுட்டி கைகளால் சைகை செய்வதையும் கண்டு மருண்டு போனாள். உம்மாவிடம் வேதனையுடன் சொன்னாள். அயல் வீட்டாருடன் பஹ்ரியா இது பற்றி கவலையுடன் பேசினாள். மகளிற்கு என்ன நடக்குமோ என்ற பயம். அயல் வீட்டாரான ஹுஸைன் முஹம்மதிலன் வீட்டில் அவர்கள் பெண் பிள்ளைகளுடனும், இன்னொரு உறவினரான ஒமர் ஜனபி வீட்டில் அவரது பெண்பிள்ளைகளுடனும் இரவில் தங்கினாள்.
டேல் கிறீன் அபீர் ஹம்ஸா மீது ஒரு கண் வைத்திருந்தான். சோதனை சாவடியை கடக்கும் போது அவளை எதாவது ஒரு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். ஒரு முறை அபீர் ஹம்ஸாவின் சகோதரியின் கன்னத்தை செல்லமாக கில்லி இவளின் காதில் முனகினான். இதனால் அபீர் ஹம்ஸா அச்சத்தால் உறைந்து போனாள். இதனை தான் கண்கூடாக கண்டதாக அவள் சகோதரன் முஹம்மத் பின்னாட்களில் சாட்சி சொன்னான்.
03.
அபீர் ஹம்ஸாவின் தயாரின் பயம் நியாயமானதே. சோதனை சாவடியில் இருந்த டேல் கிறீனும் அவனுடன் கடமையாற்றிய ஏனைய நால்வரும் அபீர் ஹம்ஸாவை கற்பழிப்பது என்பதை மனதில் கொண்டனர். அதற்கான தருணம் வரும் வரை காத்திருந்தனர். அமெரிக்க கழுகுகளாக.
12-03-2006. நன்றாக மது வருந்தி விட்டு தங்கள் திட்டத்தை செயற்படுத்த தயாராகினர். அன்றைய ஈராக்கிய “ஷீஆ” இராணுவத்தினரிற்கு கொஞ்சம் டொல்களை பையில் திணித்தனர். நடுச்சாமம் 2.00 மணிக்கு ஷியா இராணுவத்தினரின் துணையுடன் அபீர் ஹம்ஸாவின் வீட்டை சுற்றி வளைத்தனர். ஈராக் படையினரை வீட்டை சுற்றி காவலிற்கு அமர்த்தினான் கீறீன். ஜேம்ஸ் பார்க்கர், போல் கோர்ட்டேஸ், ஜெம்ஸி ஸ்பீல்மென், பிறையன் ஹோவார்ட், டேல் கிறீன். இந்த ஐந்து அமெரிக்க ஆக்கிரம்பாளர்களும் வீட்டினுள் நுழைந்தனர்.
சடுதியாக நுழைந்த அமெரிக்க இராணுவத்தை கண்டு ஹம்ஸாவும், பக்ரியாவும் மிரண்டு போயினர். அவர்களையும் கடைசி குழைந்தை ஹாதிலையும் படுக்கை அறையில் சென்று குப்புற படுக்குமாறு பணித்தான் கிறீன் டேல். அபீர் ஹம்ஸாவை வரவேற்பறை மூளையில் அமருமாறு கூறினான்.
போல் கோர்ட்டுஸ், ஜேம்ஸ் பார்க்கர் இருவரும் பதினான்கே வயது நிரம்பிய அபீர் ஹம்ஸாவை கதற கதற கற்பழித்னர். “யூ முஸ்லிம் பிட்ச்” எனும் வார்த்தைகளை அடிக்கடி சொல்லி சப்தமிட்டனர். துடித்து போய் பாயந்து வந்த ஹம்ஸாவையும் அவர் மனைவி பஹ்ரியாவையும் தனது M-16 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தள்ளினான் டேல் கிறீன். ஹாதிலின் தலையை நிதானமாக சிதறடித்தான். வெளியே வந்து சாவகாசமாக கூறினான், “ஈராக்கிய நாய்கள் செத்துப்போய் விட்டன”.
தனது பெற்றோர் கொல்லப்படுவதை அந்த உணர்வற்ற நிலையிலும் புரிந்து கொண்டாள் அபீர். கண்ணீர் மட்டும் வழிந்தது. வாயில் இருந்து சப்தம் எழவில்லை. அந்த அளவிற்கு அமெரிக்க மிருகங்கள் அவளை கற்பழித்திருந்தன. இப்போது கிறீனின் முறை. பல முறை அவளை சீரழித்தான். காமம் என்பதையும் தாண்டிய முஸ்லிம்கள் மீதான வெறுப்பின் உச்ச நிலை அவன் உடலில் மிகைத்து நின்றது. இறுதியாக அந்த வெள்ளை புறாவை ஒரு தலையணியால் முகத்தை அமத்தி திணற திணற கொலை செய்தான். வாழ்வின் விவரிக்க முடியாத கனவுகளுடன் வாழ்ந்த அபீர் ஹம்ஸா அமைதியாக்கப்பட்டாள். சில துணிகளை எடுத்து அவள் தலையிலும் மார்பிலும் போட்டு தீயிட்டான் டேல் கிறீன். பின்னர் அமெரிக்க இராணுவம் சிவிங்கம் மென்றவாறு வெளியேறியது. போகும் போது டேல் கிறீன் இராக்கிய இராணுவ லெப்டினன்டை பார்த்து சொன்னான், வீடு பற்றி எரியும் வரை காவலிருங்கள் என்று. மறக்காமல் நாளை காலை பார்ட்டிக்கும் வந்து விடுகங்ள் என்று.
ஹசன் பாரூக் அபீர் ஹம்ஸாவின் அயல் வீட்டுகாரர். மெல்ல தலை நீட்டினார். அருகில் இருந்த தேசிய பாதுகாப்பு படை வீரனிடம் கேட்டார். என்ன நடந்தது. அமெரிக்க இராணுவம் வந்தது. வேட்டொலிகள் கேட்டன. வீடு எரிகிறது என்று அதற்கு அந்த ஷீஆ வீரன் சொன்னான்....
“ அல்-கய்தா தீவிரவாதிகள் உள்நுழைந்து குடும்பத்தையே குளோஸ் பண்ணி விட்டார்கள். அவர்களை விரட்டிக்கொண்டு அமெரிக்க படையினர் சென்றுள்ளனர். நாங்கள் வேறு அல்-காய்தாவினர் வராமல் இருக்க காவல் நிற்கின்றோம்” என்று.
பாரூக் மீண்டும் கேட்டார்.“நான் உள்ளே செல்லலாமா. வீட்டுக்காரரின் உறவினர்களிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்”. என்ன ஆச்சரியமோ தெரியவில்லை. அனுமதி வழங்கப்பட்டது. உள்ளே சென்றவரிற்கு அதிர்ச்சி. இதயம் வெடித்து விடும் போல இருந்தது. பிஞ்சு அபீர் ஹம்ஸாவின் முகம் கருக்கப்பட்டிருந்தது. மேலாடைகள் உயர்த்தப்பட்டு கழுத்து வரை கிடந்தன. மார்பகம் தீயிடப்பட்டிருந்தது. இரண்டு கால்களிலன் நடுவிலும் இரத்தம் வடிந்திருந்தது. பாரூக் புரிந்து கொண்டா். எல்லாவற்றையுமே. எதுவும் பேசாமல் வெளியேறினார். வெளியில் நின்ற ஷீஆ வீரன் கேட்டான். என்ன பார்த்தாய் என்று? பாரூக் சொன்னார் “எல்லாமே எரிந்து விட்டன என்று”. இந்த சம்பவத்தின் இரத்த சாட்சி அவர்.
மறுநாள் காலையில் இன்னொரு அமெரிக்க இராணுவ குழு வந்தது. மறுநாள் மாலை வரை அந்த வீட்டை காவல் காத்து நின்றது. “காஸீம் குடும்பம் ஷீஆக்கள். அதனாலேயே அல்-காய்தாவினர் அவர்களை கொன்றனர்” என ஹேன்ட் ஸ்பீக்கர் மூலம் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆனால் உண்மையில் காஸிம் குடும்பம் ஷீஆக்களே அல்ல. சுன்னத்வல் ஜமாத் முஸ்லிம்கள். ஒரு அமெரிக்கர்களின் காம வெறியாட்த்திற்கு சுன்னி ஷிஆவாக மாறும் கதையிது. அப்படியானால் அரசியலில் எத்தனை சுன்னிகள், ஷிஆக்களாகவும், ஷிஆக்கள் சுன்னிகளாகவும் வடிவம் பெறுவர்.?
உடல்களை தங்கள் தளத்திற்கு எடுத்து சென்ற அமெரிக்க இராணுவம் மறு நாள் காலையில் மஹ்மூதியா வைத்தியசாலையில் உடல்களை கையளித்தது. வைத்தியசாலை நிறுவாகத்திடம் பிரேத பரிசோதனை ரிப்போட்டில் AK 47 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாக எழுதி வாங்கியது.
4.
ஹஸன் பாரூக் இது பற்றி சொல்கையில் “இந்த படுகொலைகள் தொடர்பாக அமைதியாக இருக்க அயலவர்களான எங்களிற்கு முடியவில்லை. நாம் இந்த விடயத்தை முஜாஹிதீன்களிடம் எடுத்து சென்றோம். அதிலிருந்து இரு வாரகாலப்பகுதியில் அவர்கள் 30 இற்கும் மேற்பட்ட சிறிய தாக்குதல்களை அமெரிக்கர்களை குறிவைத்து நடாத்தினர். இருந்தாலும் எங்களிற்கு இரத்தம் கொதித்தது. நாங்கள் இதனை அல்அரெபியா தொலைக்காட்சி நிலையத்திற்கு எடுத்து சென்றோம். அவர்கள் அதனை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க தகவல் திணைக்களம் தரும் செய்திகளையும், ஈராக்கில் உள்ள அமெரிக்க கட்டளை தளபதி கூறும் செய்திகளையுமே தங்களால் ஒளிபரப்ப முடியும் திட்டவட்டமாக கூறியனர். இதனை சொன்னது அதன் உத்தியோகபூர்வ செய்தி தொடர்பாளர் அஹ்மட் அல் சாலிஹ்.
நாம் உள்ளூர் செய்தி பத்திரிகைகளையும், தேசிய பத்திரிகைகளையும் நாடினோம். தலைவர் சதாமிற்கு பிறகு அவையெல்லாவற்றையும் ஷியாக்களும், ஈரானும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். கொல்லப்பட்டவர்கள் சுன்னி முஸ்லிம்கள். இந்த படுபாதகத்திற்கு துணை நின்றவர்கள் ஷிஆ ஈராக்கிய தேசிய இராணுவத்தினர். எந்த பத்திரிகையும் செய்திகளை போட மறுத்தன. அமெரிக்க இராணுவத்திடம் சொல்வோம் என மிரட்டினர்”.
“மக்பிரத் அல் இஸ்லாம்” என்ற செய்தி நிறுவனமே இதனை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அவர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்தனர். நேரடி சாட்சியங்களை பதிவு செய்தனர். இதன் பின்னர் அமெரிக்க இராணுவ பொலிசார் அங்கு வந்தனர். அபீர் ஹம்ஸாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
5.
இறுதியில் இந்த செய்தி உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல், வேர்ல்ட் ஹியூமன் ரைட்ஸ், அன்டி டோர்சர் வுமென் விங் என எவரெவரெல்லாமோ வந்து கமெராக்களால் சூட்டிங் செய்தனர். கலைப்பு வந்த போதெல்லாம் கொக்கோ கோலாவை பருகினர். பல டொக்கியூமென்றிகள் உருவாகின. உலகின் வெளிச்சமான விடயங்களுல் இதுவும் ஒன்றாகி போனபோது அந்த ஐந்து அமெரிக்க சிப்பாய்களும் கைது செய்யப்பட்டனர்.
விசாரனை ஆரம்பமாகியது. குற்றம் நிகழ்ந்தது மஹ்மூதியா எனும் ஈராக்கிய பிரதேசத்தில். ஆனால் விசாரணைகள் நடந்ததோ அமெரிக்காவில். குற்றம் செய்ததாக பலி சுமத்தப்பட்ட சதாமிற்கு ஜெனீவாவின் சர்வதேச நீதிமன்றிற்கு அனுப்பாமல் ஈராக்கில் வைத்து மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. இந்த அமெரிக்க ஜனநாயக லொஜிக் என்னவென்று புரியவில்லை. குற்றவாளிகளிற்கு ஆயூள் தண்டனை வழங்கப்பட்டது. டேல் கிறீன்தான் குற்றமே செய்யவில்லை என்று வாதிட்டான். இறுதியில் 90 வருடங்களிற்கு குறையாத சிறைத்தண்டனை இவர்களிற்கு. ஸ்பீல் ஹோவார்ட் கற்பழிப்பில் ஈடுபடவில்லை. அவன் வயர்லெஸ் ஒப்பரேட்டராக மட்டும் வீட்டினுள் செயற்பட்டதால் 5 வருட தண்டனை கிடைத்தது.
07.
மேலே சொன்ன சம்பவம் ஈராக்கில் நடந்தது. ஆனால் இது போன்ற ஆயிரம் சம்பவங்கள் ஈராக்கில் நடந்தேறியுள்ளன. ஆப்கானில் நடந்தேறியுள்ளன. இவற்றை செய்தது அமெரிக்க இராணுவம். செச்னியாவில் ரஷ்ய இராணுவம் செய்கிறது. காஷ்மீரில் இந்திய இராணுவம் செய்கிறது. பலஸ்தீனில் யூத இராணுவம் செய்கிறது. இது தான் இன்றைய முஸ்லிம் உம்மத்தின் நிலை.
அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பின்னர் அவற்றிற்கு ஷியா சுன்னி முலாம் பூசப்படுகின்றன. உலகிற்கு “ஈரான்” அமெரிக்காவின் விரோதி. ஈராக்கில் “ஷியா” அரசை ஸ்தாபிப்பதில் அமெரிக்காவின் நண்பன். அல் அரேபியா என்பது அல்ஜெஸீராவிற்கு நிகரான மத்திய கிழக்கின் தொலைக்காட்சி சேவை. ஆனால் அது அமெரிக்க கட்டளை தளபதியின் பிரஸ் ரிலீசையே செய்தியாக தருகிறது.
Thanks : Copied from FB - 25-07-2012

No comments:
Post a Comment