Monday, August 27, 2012

பைஸர் மதனியும் சோனக தெருவின் ஒற்றுமையும் - சொல்ல முடிந்ததும் சொல்ல முடியாததும்..


சோனக தெருவின் பெருநாள் தொழுகை இரண்டாவது வருடமும் சச்சரவுளுடன் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளன. பெருநாள் தொழுகையை திடலில் நடாத்துவதை தடுக்க முனைந்த கூட்டம் தோற்றுப்போனது.  பெண்கள் பெருநாள் தொழுகையில் பங்குபற்றுவது ஹராமென மீண்டும் கொடியை உயர்த்தியது அந்த கூட்டம். அதற்கும் சுன்னாவின் ஆதாரம் கண்டு தலை குனிந்தது. இப்போது சமூக ஒற்றுமைக்கு அவர் வார்த்தைகள் பங்கம் என குரல் எழுப்புகிறது.

“ஒற்றுமை” என்பது தவிர்க்க முடியாதது. இது பற்றி அல் குர்ஆனும் சுன்னாவும் நிறையவே தெளிவாக சொல்லியுள்ளன. இந்த ஒற்றுமை பற்றி பேசும் சகோதரர்கள் ஒற்றுமை என்ற கூடாரத்திற்குள் எந்த ஒட்டகத்தை கட்ட முயற்ச்சிக்கிறார்கள்? என்பது புரியவில்லை.
பைஸர் இப்னு அலியார் அசரி அஸ்செய்லானி அதாவது பைசர் மௌலவியின் வருகை சோனக தெருவின் அரபு வசந்தத்திற்கு ஒப்பானது. அவர் இஸ்லாம் தொடர்பாக அறிவூட்டும் விடயங்கள் பலரிற்கு பிடிப்பதில்லை. இதனால் தங்கள் ஆதிக்கங்கள்,அதிகாரங்கள் தம்மைவிட்டகன்று விடும் என்ற தெளிவான அச்சம் அவர்களிற்கு. அன்றைய அபூ ஜஹ்லின் சிந்தனையை ஒத்தவையாகவே இவை அடையாளம் காணப்படுகின்றன.

சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களிடம் நிதிகளை பெற்று வந்தவர்களிற்கு இவரின் வருகையால் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. இது அவர்களிற்கு ஜீரணிக்க முடியாத விடயம் என்பதே உண்மை.

ஒற்றுமை பற்றி பேசும் இவர்கள் ஒரு தேர்தல் வந்து விட்டால் சமூகத்தை எவ்வாறெல்லாம் கூறு போடுகிறார்கள். அப்போது இந்த ஒற்றுமை தேத்தனி கடையில் பிளேன்டீ குடிக்க போய் விட்டதா என்ன?

பைசர் மௌலவியை ஒரங்கட்டி விட்டால் சமூக ஒற்றுமை தளைத்து விடுமா என்ன?. சோனக தெருவின் வரலாற்று தகராறுகள் இன்னும் சந்தி சிரிக்கும் இன்றைய பொழுதுகளில் சோனக தெருவின் ஓற்றுமை பைசர் மௌலவியால் குழப்பப்படுகிறது என்பது எவ்வளவு ஒரு தவறான பிரச்சாரம்?

முல்லாக்களே இன்று ஒரு கட்சி, நாளை இன்னொரு கட்சி என அரசியல் செய்து கொண்டு சமூக ஒற்றுமை பற்றியும், பயான் பற்றியும் குறுக்கு விசாரணை செய்வதை எந்த சுவற்றில் எழுதுவது?

ஒரு செய்தி மட்டும் நிச்சயமானது. ... அது...

குர்ஆன் சுன்னாவை பேசும் தவ்ஹீதிய குரலை அடக்க முடியாது. அது இந்த நாடு முழுக்க ஒலிக்கும் தேசிய குரல். அல்லாஹ்வின் இன்றைய தெரிவு பைசர் மதனி. பைசர் மதனியை முடக்குவதால் குர்ஆன் சுன்னாவின் குரலை, செயற்பாட்டை யாராலும் தடுக்க முடியாது. நம்ரூத்தின் செல்வத்தைவிடவும் பிர்அவ்னின் அதிகாரத்தை விடவும் இந்த உலகில் யாருக்கும் எதுவும் இருந்ததில்லை.

பைஸர் மதனி இல்லாவிட்டால் தவ்ஹீத் இல்லை என நினைக்கும் சிறுபிள்ளை சிந்தனைகள் தான் இன்று நம்மிடம் காணப்படுகிறது என்பதை நினைக்கையில் கவலையாகவிருக்கிறது. நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது. மாற்ற வேண்டியுமிருக்கிறது.

யார் தடுத்தாலும், யார் குழப்பம் செய்தாலும், யார் சதிகள் செய்தாலும், யார் தம் அதிகாரங்களை பாவித்தாலும் நிச்சயமாக அல்லாஹ்வின் குரல் மிகைத்தே தீரும். இது வரலாற்று உண்மை. பைஸர் மதனி சத்திய மார்க்கத்தில் இருக்கும் வரை நாம் அவரை ஆதரிப்போம். ஒரு துடிப்பான அறிவுமிக்க அகீதாவில் தெளிவுமிக்க இஸ்லாத்தை நேசிக்கும் ஒரு இளைஞராகவே அவரை எம்மால் காண முடிகிறது. சம்பவங்கள் பற்றி அவருடன் நேரடியாக பேசி ஆராய்ந்து, அவரது விளக்கங்களை பெற்ற பின்னரே இந்த வரிகள் எழுதப்படுகின்றன.

நாம் மோதுவது பைஸருடன் என்பது பொய்யான மாயை. நாம் மோதுவது குர்ஆனுடனும் சுன்னாவுடனும். இறைவனுடன் யுத்தம் பிரகடனம் செய்து விட்டு அதற்கு சமூக ஒற்றுமை, சமூக வழமை, சம்பிரதாயம் என பொய் முலாம் பூசுவதால் நாம் எம்மை அழித்து கொள்ள முயல்கிறோம். எம்முடன் உள்ள செய்தான் எம்மை வேகமாக வழிகெடுக்கின்றான்.
அல்-குர்ஆன், சுன்னாவின் வரையறைக்குள் நின்று பைஸர் மதனி செயற்படும் வரை நாம் அவரின் கருத்துக்களிற்கு துணை நிற்போம். மனிதன் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுப்பப்படும் கேள்விகள் இருக்கலாம். அவர் மார்க்கத்தின் அடிப்படைகளில் நிற்கும் வரை அவர் உள்வாங்கப்படுவார். இல்லாவிடின் வீசியெறியப்படுவார். தஃவா களத்தில் அவர் சிறப்பாகவே செயற்படுகிறார் என்பதே உண்மை. சிறு சிறு அனுபவ குறைவான விவகாரங்களை பூதகரமான விடயங்களாக மாற்றாமல் பார்த்துகொள்வதே பண்பானது. மேலும் பல மதனிகள் சோனக தெருவில் உருவாகி இஸ்லாத்திற்கு உரமூட்ட வேண்டும் என்பதே எமது அவா. பைஸர் மதனியில் மட்டும் இஸ்லாம் ஒரு போதும் தங்கி நிற்பதில்லை.
Photo: இஸ்லாத்துக்கு மட்டுமே வெற்றி ...Jaffna மட்டும் விதிவிலக்கா ?

அன்பின் சகோதரர்களே... உங்களை வந்தடையும் செய்திகளை உடனடியாக நம்பிவிடாதீர்கள். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று நம்பாதீர்கள். சொல்பவரின் அந்தஸ்துகளை வைத்து எடை போடாதீர்கள். எதுவாக இருந்தாலும் ்அது விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக ஆராயுங்கள். அப்போது தெரியும். அபூ ஜஹ்ல் யார் உமர் யார் என்று.

No comments:

Post a Comment