மியன்மார்: புகைப்படங்களின் பின்னால் உள்ள புனைவுகள்!
‘நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்‘ (அல் குர

்ஆன் 49 : 6)

மியன்மாரில் வாழும் ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் பௌத்த பிக்குகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் ஊடகங்கள் தொடர்ச்சியாக தமது கரிசனையை வெளிப்படுத்தி வருகின்ற அதேநேரம் பலரும் இணையத்தளங்கள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மியன்மாரில் முஸ்லிம்கள் பௌத்த பிக்குகளால் கூட்டாக படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படும் பல்வேறு புகைப்படங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இப் புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்து தமது ஆழ்ந்த கண்டனங்களையும் கவலைகளையும் அநுதாபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் நடந்து கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாயினும் இது தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பரிமாறப்படும் புகைப்படங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
சில தினங்களாக மின்னஞ்சல் வாயிலாகவும் பேஸ்புக் வாயிலாகவும் நான் கண்ணுற்ற புகைப்படங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்பட்ட போதுதான் அவற்றின் பின்னணி தெரியவந்தது.
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனம் நமக்கு எச்சரிப்பதைப் போன்று இவ்வாறான விடயங்களை உறுதிப்படுத்தாமல் எடுத்த எடுப்பில் மற்றவர்களுடன் பரிமாறி பரபரப்பை உண்டுபண்ணுவது சமூகத்தில் குழப்பங்களைத் தூண்டவே வழிவகுக்கும்.
நன்றி காத்தான்குடி .இன்போ

உண்மையை உணரத்தியமைக்கு நன்றி ஜஸாகுமுல்லாஹுஹைரா. இந்த உண்மைச் செய்தியைக் கேட்டு மனம் ஆறுதல் அடைந்துள்ளது.
ReplyDelete