யாழ்.குடாநாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் வாள்வெட்டு மற்றும் கத்தியால் கீறி சிறுகாயங்கள் என்று சுமார் 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
பிறரது தூண்டுதல்களால் சிலர் பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு இதுவரை எந்த முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்று யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
தனிப்பட்டவர்களது முரண்பாடுகள் காரணமாக ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினர் மீது நேரடியாக பிரச்சினைகளில் ஈடுபடாது அடியாள்களுக்குப் பணம் கொடுத்து இவ்வாறான தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால் பணம் பெற்றுக் கொண்டு சிலர் வாள்வெட்டுக் காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்று முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. யாராவது பதிவு செய்வார்களாயின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment