அவர்களின் இலக்கணம் என்ன?
அவர்களின் மீது நமது கடமைகள் என்ன?
அவர்களின் மீது நமது கடமைகள் என்ன?
என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் உண்மையான அவ்லியாக்களையும் போலியானவர்களையும் நாம் அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது போய் விடும். அவ்வாறு இனம் கண்டு கொள்ளமுடியாததால் தான்அப்பாவி மக்கள் போலியானவர்களைஅவ்லியாக்கள் என நம்பி ஏமாந்த விடுகின்றனர். அதனால் தடம் புரண்டு வழி கேட்டிற்கே சென்று விடுகின்றனர்.வல்லமையும் ஆற்றலும் மிக்க அல்லாஹ்விடம் வைக்கவேண்டிய நம்பிக்கையை அவ்லியாக்களிடம் வைத்து ஈமானையே இழந்து நிற்கின்ற பரிதாபமான நிலையைக் காணமுடிகிறது.
அவ்லியாக்களை நம்புவது நமது நம்பிக்கையைச் சார்ந்தது தான். ஆயினும்,
அவர்களை நமது சமுதாயம் புரிந்து கொண்ட விதம் தான் தவறானது என்பதைத்
தெளிவுபடுத்துவதே நமது இந்ததலைப்பின் நோக்கமாகும்.
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் யார் என்பதை திருமறையின் பல்வேறு வசனங்கள் நமக்குத் தெளிவுமடுத்துகின்றன.
அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமைற பின்வருமாறு கூறுவதைப் பாருங்கள்:-
அலா இன்ன அவ்லியால்லாஹி……..
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவைலப்படவும்
மாட்டார்கள்.அவர்கள் இறைவைன நம்புவார்கள்.(அவைன) அஞ்சுவோராகவும்
இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)
இந்த இறைவசனம் அவர்கள் :-
1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.
2. எதைப்பற்றியும் கவைலப்படமாட்டார்கள்
3) இறைவனை உறுதியாக நம்புவார்கள்
4. உள்ளும் புறமும் இறைவைன அஞ்சுவார்கள் (தக்வா
உடன் இருப்பார்கள்.)
இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவைன
நம்புகிறாரா? இறைவைன அஞ்சுகிறாரா? என்பதை எவராலும் அறிய
முடியாது.ஏனெனில் ‘ஈமான், தக்வா’ என்னும் இருதன்மைகளும் வெளியில்
தெரிபவை அல்ல.உள்ளங்களில் மறைந்து இருப்பைவயாகும். இறைவைனத்
தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது.எனேவ யார் ‘இறை நேசர்’
என்பதை இறைவன் ஒருவனே நன்கறிவான்.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், ‘வலி என்பவர்,
1.அல் ஆலிமு பில்லாஹ்-இறைவைனப்பற்றி அறிந்தவராக இருப்பார்
.2.அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டைளகைள சரியாகக்
கடைபிடிப்பவராக இருப்பார்.
3.அல்முக்லிஸ் ஃபீ இபாததிஹி – அவைன வணங்கி வழிபடுவதில்
பரிசுத்தமானவராக இருப்பார’ என விளக்கமளிக்கிறார்கள்.
இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள்,
இiறேவதத்தை முற்றிலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்
பின்பற்றுபவராக இருப்பவரே இறைநேசராக இருக்கமுடியும்’
எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை ‘வலீ ‘ என்றும் ‘மஹான்’
என்றும் சான்றிதழ் வழங்க முடியும்?
இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறும்; எவைரப்பற்றியும் எதையும்
நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின் அகவாழ்வைப்பற்றியோ
புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது. அவர்களின்
உண்மையான வரலாறும் நமக்குத் தெரியாது. அல்லாஹ்வோ,
அவனது தூதரோ அவர்களைப்பற்றி அடையாளம் காட்டவும் இல்லை.
குர்ஆனில் இறைதூதர்களைப்பற்றிக் கூறப்படுகிறது. அவர்களையடுத்து
இறைவனின் நேசத்தைப் பெற்ற மர்யம் (அலை), ஃபிர்வ்னின் மனைவி
(ஆசியா), இம்ரான்,லுக்மான்,கிள்ரு,கிஜ்பீலு,ஹபீபுந்நஜ்ஜார்,அஸ்ஹாபுல்
கஹ்ஃபு,ஸைத் (ரலி),துல்கர்னைன் போன்ற நல்லடியார்களைப்பற்றியும்,
பத்ரு, உஹ்து,அஹ்ஸாப்,ஹுனைன்,அஸ்ஹாபுஷ்ஷஜரா போன்ற
தியாகிகளையும் குறிப்பிடுகிறான்..இன்னும் பெயர் குறிப்பிடாமல்
சிலரையும்,பொதுவாக நபித்தோழர் தோழியர் பற்றியும் குறிப்பிடுகிறான்.
அதைப்போல் நபி (ஸல்) அவர்களும், தமது காலத்தில் வாழ்ந்த
நாயகத் தோழர்கள், தோழியர்கள் பலரையும் சுவர்க்கவாசிகள்
என அடையாளம் காட்டியுள்ளார்கள். இவர்களை நாம் தைரியமாக
‘அவ்லியாக்கள்’ எனக் கூறலாம். மற்றவர்களைப்பறிறி அல்லாஹ்வோ,
அவனது தூதரோ அறிவிக்காத வரை நாம் யாரையும் அவ்லியாக்கள்
எனக் கூறமுடியாது.
இறைவைன உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது நல்லடியார்கைளப்
பற்றிக் குறிப்பிடும் போது,
رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
‘ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹும்’
‘அவர்கைள அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவைனப்
பொருந்திக்கொண்டார்கள்’ (அல்குர்ஆன் 98:8) என இறைமறை குறிப்பிடுகின்றது.
இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவைனப் பொருந்திக
கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்கைளப் பொருந்திக் கொண்டானா
இல்லையா என்பைத நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ,
இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும்?
எனவே, எவைரயும் நாமாக ‘வலி’ என்றோ ‘அவ்லியா’ என்றோ கூறவோ
முடியாது. பட்டம் சூட்டவும் முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை ‘அவ்லியா’
என்று கூறினால் அவர் பொய்யராகேவ கருதப்படுவார்.
(வலி என்றால் இறை நேசர், அவ்லியா என்றால் இiறேநசர்கள் என்பது
பொருளாகும். ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல்அவ்லியா
என்றே மக்கள் கூறுகின்றனர். எனேவ வழக்கப்படியே நாம் அவ்லியாஎன்ற
பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
இனி இந்த இலக்கணத்தை வைத்து நாம் கொண்டாடி வருபவர்களைஅவ்லியாக்கள் எனக் கூறலாமா ?என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்போது”அவ்லியாக்கள் பெயரால் அவதாரங்கள் என்ற கட்டுரையை நமது இணைய தளத்தில் படியுங்கள்.
தொடரும்….
No comments:
Post a Comment