வெளிமலை, இலந்தைக்குளம் கிராமமக்கள் மீள்குடியேற்றதிட்டத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இன்மை,மலசல கூடம் இன்மை போன்ற பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதனால் இந்த மக்கள் குடிநீருக்காக நீர் உள்ள கிணறுகளைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இவ்வாறு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இப்பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகம் எதுவும் முசலி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவில்லை என்றுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் பவுசர்களின் மூலம் கொண்டுவரப் படுகின்ற தண்ணீரை ரூபா. 300 தொடக்கம் ரூபா. 400 வரைபணம் செலுத்தி குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர்.
நீர் வசதியுள்ள கிணறுகள் அருகில் இருந்தால் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீர் வசதியுள்ள கிணறுகள் தூரத்தில் இருந்தால் கூடிய கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் பவுசர்கள் மூலம் குடிநீரைப்பெறுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பவுசர்கள் மூலம குடிநீர் பெறுவதற்கு குறைந்தது 2 அல்லது 3 தினங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது .ஆனால தண்ணீருக்கென பணம்செலுத்த முடியாதவர்கள் அருகிலுள்ள பொதுக் கிணறுகளையும் நீர் வளமுள்ள பிரதேசங்களுக்குச் சென்றுகொண்டுவர வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலந்தைக் குளம், வெளிமலை, பண்டாரவெளி, மணற்குளம் மக்களின்குடிநீர் பிரச்சினை,மலசலகூடம் பிரச்சினை போன்ற பலஅடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க முசலிபிரதேச சபை முன்வருமா?
No comments:
Post a Comment