Monday, September 10, 2012

உங்களுடன் ஒரு நிமிடம்.....



Photoஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு....

அன்பான வாசகர்களிற்கு...

எமது தளத்தில் வெள்ளக்கடற்கரை தர்ஹா வழிபாடு தொடர்பாக எழுதப்பட்டதாக யாழ்ப்பாணம் சோனக தெருவில் ஒரு சச்சரவு உருவானதாக எமக்கு உறுதியாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நிகழ்வை முன்னின்று நடாத்தியவர்கள் இதனையும் இஸ்லாம் என்றும், ஜம்மியதுல் உலமா அங்கீகாரம் உள்ளதென்றும் போர்கொடி உயர்த்தியுள்ளனர். சட்டம் பேசுகின்றனர். அவர்கள் சட்ட அறிவை எண்ணுகையில் அவர்கள் மேல் அனுதாபம் தான் வருகிறது.

இலங்கையில் ஒருவர் தான் சார்ந்த மதத்தில் தவறுகள், குழப்பங்கள் இருப்பதனை கண்டால் அது தொடர்பாக தனது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மற்றவர்களை பெயர் குறிப்பிட்டு நேரடியாக அவமதிக்காத எந்த ஒரு கருத்தையும் வெளியிட பரிபூரண அனுமதியுண்டு.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பில்களின் பிரகாரம் உயர் நீதிமன்றம் 5 அமைப்புக்களிற்கு நாம் அறிந்த வகையில் மார்க்க தீர்ப்பிற்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயம் நம்மில் பலரிற்கு தெரியாது. ஆனால் நாம் அறிந்ததெல்லாம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை மட்டுமே.

1) அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை
2) அகில இலங்கை ஸலப் கவுன்சில்
3) இஸ்லாமிய ஷரியா கவுன்ஷில்
4) காதியானிகளின் பத்வா அமைப்பு
5) டவ்டி போரா சமூகத்தின் பத்வா அமைப்பு

இவையனைத்தும் சட்டத்தின் முன்பு சமனானவை. “அகில இலங்கை ஸலப் கவுன்ஷில் நேரடியாகவே இணைவைப்பை தெளிவான குப்ர்” என்று சுட்டிக்காட்டியுள்ளது. காதியானிகள், டவ்டி போரா சமூகம் என்பன அகீதாவின் அடிப்படையில் எம்மால் நிராகரிக்கப்பட்ட அமைப்புக்களாகும்.

யாரையும் புண்படுத்தும் நோக்கில் நாம் எதையும் பிரசுரிக்கவில்லை. அப்படி செய்யப்போவதும் இல்லை. ஆனால் ஏகத்துவத்திற்கு எதிரான அனைத்து கொள்கைகளையும் உறுதியாக நிராகரிப்பதில் நாம் மேலும் உறுதியாக இருக்க இறைவன் துணைபுரிவானாக..

No comments:

Post a Comment