Monday, September 17, 2012

அல்லாஹ்-வை மட்டும் வணங்குவோம் – தர்ஹா வழிபாட்டை தவிர்ப்போம்



அல்லாஹ்-வை மட்டும் வணங்குவோம்

அல்லாஹ்வுக்கு நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய நற்செயல்கள் அழிந்து விடும் மேலும் நீர் நஷ்டமடைந்தோரில் உள்ளவராகிவிடுவீர் (அல்குர்ஆன்: 39:65)
அல்லாஹ்-வை விடுத்து கியாமத் நாள்வரை அழைத்தாலும தமக்குப் பதில் தராதவர்களை அழைப்பவனைவிட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பைப்பற்றி அறியாது உள்ளனர். (அல்குர்ஆன்: 46:5)

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான் (நபிமொழி; நூல்: முஸ்லிம்)


எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள் (நபிமொழி; நூல்: அபூதாவூத்)


இறைவா! எனது கப்ரை வணக்கத்தலமாக ஆக்கிவிடாதே! தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணக்கத்தலங்களாக அமைத்துக் கொண்டோர் மீது அல்லாஹ்-வின் கோபம் அதிகரிக்கட்டுமாக! (நபிமொழி; நூல்: முஅத்தா)

அபுல் ஹய்யாஜ் என்பவர் கூறுகின்றார்: அலீ (ரலி) என்னிடம் கூறினார் நபி (ஸல்) அவர்கள் எந்த பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே பணிக்காக நான் உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அழிக்காமல் விடாதே! மேலும் உயாந்து நிற்கும் எந்த கப்ரையும் தரைமட்டமகாமல் விட்டு விடாதே! (நபிமொழி; நூல்: முஸ்லிம்)


கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அவற்றை வணக்கத்தலங்களாக அமைத்துக் கொள்பவர்களையம் அவற்றில் விளக்குகள் ஏற்றுபவர்களையம் அல்லாஹ்-வின் தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் (நபிமொழி; நூல்: திர்மிதி)


வெளியீடு - நிதா உல் புர்கான் - இலங்கை தலைமையகம்

No comments:

Post a Comment