சுன்னாகத்தில் உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் உள்ள நாகேந்திரன் என்பவரது வீட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது அங்குநின்ற வளர்ப்பு நாய் ஒன்றையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக்குள் போட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இருவரையும் வெளியே அழைத்து கதவைப் பூட்டிவிட்டு அறைகளிற்குள் மணித்தியாலக் கணக்காக பரிசோதனை நடத்தியுள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இருவரையும் வெளியே அழைத்து கதவைப் பூட்டிவிட்டு அறைகளிற்குள் மணித்தியாலக் கணக்காக பரிசோதனை நடத்தியுள்ளனர்.
கறுப்பு நிறத் துணியினால் முகத்தை மறைத்துச் சென்ற நால்வர் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலை காணப்பட்டது.
அதேவேளை, இந்த வீட்டுக்கு அண்மையில் இராணுவக் காவலரண் ஒன்றும் உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் நேற்றுப் பிற்பகல் வரை பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 11 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தொலைக் காட்சி திருட்டுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தாலும் சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உரிமையாளரான வர்த்தகர் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் இந்த முகமூடிக் கும்பல் அங்கு தமது கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஹங்கநாத், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment