Sunday, January 22, 2012

மீண்டும்..மீண்டும்.. வேதாளம் முருங்கை மரத்தில்....



"சாத்தானின் கவிதைகள்"அரங்கேற்றம்!....

ஜெய்ப்பூரில் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்வதாக இருந்த சல்மான் ருஷ்டிக்கு முஸ்லீம் அமைப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவரை கொலை செய்ய தடை செய்யப்பட்ட சிமி உள்ளிட்ட இயக்கங்கள் முயலக் கூடும் என்ற உளவு துறையின் அறிக்கையை தொடர்ந்து சல்மான் ருஷ்டி தான் விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்தார்.

இச்சூழலில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட ஹரி குன்ஸுரு மற்றும் அமிதவ் குமார் ஆகியோர் சல்மான் ருஷ்டிக்கு வலுத்த எதிர்ப்பை கண்டிக்கும் விதமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் சாத்தானின் கவிதைகள் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இப்புத்தகம் முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி 1997ல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேசிய குன்ஸுரு குழப்பம் விளைவிப்பவர்களுக்கும் ஷூ எறிபவர்களுக்கும் எதிராக சல்மானின் கவிதைகளை தாம் படிப்பதாக கூறி சில பகுதிகளை படித்தார். உடன் ஏற்பாட்டாளர்கள் அடுத்த பேச வந்த குமாரை அப்புத்தகத்திலிருந்து படிக்க வேண்டாம் என்று கூறியதற்கு ஒத்து கொண்ட குமார் அப்புத்தகத்திலிருந்து படித்தார். இரு கவிஞர்களையும் ட்விட்டரில் சல்மான் ருஷ்டி பாராட்டியுள்ளதோடு தனக்கு எதிராக கருத்திட்டவர்களை இஸ்ரேல் சென்று மதப்பிராச்சாரம் செய்யுமாறும் ருஷ்டி ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.

No comments:

Post a Comment