Monday, January 23, 2012

தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி




M.ரிஸ்னி முஹம்மட்
எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில்  வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி  25 வீததிற்கு நெருக்கமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 125ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.எகிப்தின்  பழமையானதும்  மதசார்பற்ற கட்சியுமான  வாப்த் 7 வீதமான வாக்குகளை மட்டும் கைப்பற்றியுள்ளது. சிறிய இஸ்லாமிய கட்சிகள் பெற்ற வாக்குகளையும் இணைந்து நோக்கும்போது 75 வீதமான வாக்குகளை  இஸ்லாமிய அரசியல் கட்சிகள்  பெற்றுள்ளதாக எகிப்திய பத்திரிகைகள் கூறகிறது. எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்று கட்டங்களையும் உள்ளடக்கிய இறுதி உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .
அமெரிக்காவில் வெளிவரும் ‘லொஸ்  ஏன்ஜல்ஸ்  டைம்ஸ்’ Los Angeles Times என்ற பத்திரிகை எகிப்தில்  இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான  கட்சியின் வெற்றி , அரசியல் இஸ்லாம்  ஒரு வருட எழுச்சியில் இருந்து உருபெற்று மத்திய கிழக்கிலும் ,வட ஆபிரிக்காவிலும் உள்ள மதசார்பற்ற சர்வாதிகாரர்களை அகற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக தன்னை பிரதியீடு செய்து வருகிறது என்பதற்கான காத்திரமான அடியாளம் என்று தெரிவித்துள்ளது .
வெற்றிக்கான  ஆரம்ப படிகள் என்று கருதப்படும் இந்ததேர்தல்  வெற்றிகளுக்காக  முஸ்லிம் உம்மாஹ் கடந்த 84 ஆண்டுகளாக காத்திருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் , அந்நூர் ஆகிய இரண்டு இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் யாப்பு வரையும் போது அதிகூடிய செல்வாக்கை செலுத்தும் என்று லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது . ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு புதிய யாப்பு உருவாக்கத்தின் போது எகிப்தின் அனைத்து தரப்புகளின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகளுடன் கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது.
அதேவேளை அந்நூர் கட்சியின் தலைவர் அப்துல் கபூர் நேர்காணல் ஒன்றில் உங்களில் கட்சி எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்படிக்கையை கிழித்து வீசி விடுமா அல்லது மாற்றத்திற்கு உட்படுத்துமா ? என்று வினவியபோது இல்லை நாங்கள் உடன்படிக்கைகளை மதித்து நடப்போம் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் பல சரத்துக்கள் செயல்படுத்தப் படாமல் உள்ளது , பலஸ்தீனுக்கு சுதந்திரம் , சுய ஆட்சி, பலஸ்தீன மண்ணில் பலஸ்தீன் ஒரு தனிநாடு என்பன அந்த உடன்படிக்கையின் செயல்படுத்தப்படாத சரத்துக்கள் அவற்றை இஸ்ரேலை அமுல்படுத்த கோருவோம் என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கீழ் சபை ஜனவரி 23 ஆம் திகதி பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து குறைந்த அதிகாரமுள்ள மேல் சபைக்கான தேர்தல் மார்ச் மாதம் வரை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் , முதலாவது தேர்தல் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான தூனிஸியாவில் இடம்பெற்றது அந்த தேர்தலில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுகொண்டது . 217 ஆசனங்களை கொண்ட சட்டவாக்க சபையில் 90 ஆசனங்களை கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்துள்ளது , அதன் பின்னர் மொரோகோவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி The Justice and Development Party -PJD- என்ற இஸ்லாமிய கட்சி 80 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. தற்போது அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் முக்கிய மையமாக கருதப்படும் எகிப்தில் இஸ்லாமிய கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளது கிலாபா நோக்கிய முஸ்லிம் உம்மாவின் வெற்றி அருவடைகளாக இந்த தேர்தல் வெற்றிகள் நோக்கப் படுவதாக சமூக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்கின்றனர்.
LankaMulim.

No comments:

Post a Comment