Monday, January 23, 2012

திறமைச்சித்தி பெற்றவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில்லை


தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் முறை ,கல்வி முறை உட்பட  நடைமுறையில் உள்ள அனைத்து நடைமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .சில மாணவர்கள் 3 (ஏ) பாடங்களிலும் திறமைச்சித்தியைப் பெற்றிருந்த போதிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர்.
எனினும் 2 (ஏ) பாடங்களில் திறமைச் சித்தியை பெற்ற ஒருவர் பல்கலைக்கழகத் திற்கு தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .லேக் ஹவுஸ் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment