இவ்விமான சேவையை நாளொன்றுக்கு இரண்டு சேவைகளை நடத்தவுள்ளதாகவும், இதற்கு 12 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவையை ஆரம்பிக்க சிறிலங்காவின் குடியியல் விமான சேவை அதிகாரசபையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், எக்ஸ்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ-9 வீதி திறக்கப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நாளொன்றுக்கு சுமார் 200 பேர் விமானம் மூலம் பயணம் செய்து வந்தனர்.
தற்போது ஏ-9 வீதி திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நாளொன்றுக்குத் தேவைப்படும் விமானப் பயண ஆசனங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைந்துள்ளதாகவும் எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment