யாழ் முஸ்லிம் வட்டாரத்திற்குள்ளும் விஜயம் செய்திருந்தனர். யாழ் முஸ்லிம் சம்மேளன முன்னாள் தலைவரும் பிரபல சமூக சேவகருமான ஜனாப் தாஹிர் (ஸியானாஸ்) அவர்களை சந்தித்த இவர்கள் யாழ் முஸ்லிம்களை பற்றிய பல தகவல்களையும் நேரடியாக திரட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம், முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள், பிரதேச அபிவிருத்தி, முஸ்லிம்களின் கல்வி மற்றும் கலாச்சார நிலைமைகள், போன்ற பல விடயங்களையும் விவரமாக கேட்டறிந்து கொண்ட இவர்கள் “முஸ்லிம் தனி அலகு, தமிழ் சுயாட்சி பகுதியில் முஸ்லிம்களின் விருப்பப்பாடு, வடக்கு கிழக்கு இணைப்பு, அதிகார பரவலாக்கம், குறிப்பாக 13ம் ஷரத்திற்கு மேலான அமுலாக்கங்கள் பற்றியும் விவரமாக அறிந்துள்ளனர். இதில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்தும் கவனமாக கேட்டுள்ளனர்.
அவர்களது கேள்விகளிற்கு அவதானமாகவும் நிதானமாகவும் பதிலளித்த தாஹிர் அவர்கள் முஸ்லிம்கள் பற்றிய ஒரு தெளிவான உண்மையான விளக்கத்தை அவர்களிற்கு நேரடியாகவே அளித்துள்ளார். அப்துல் கலாமை சந்திப்பதனையும் விட முக்கியமான அமர்வாகவே இதை எமது தளம் கருதுகிறது. அத்துடன் அவர்களை வரவேற்று விளக்கமளித்த ஜனாப் தாஹிரையும் அது பாராட்டுகிறது.
சில நாட்களிற்கு முன்பு கனேடிய அமைப்பு சார்பாக வருகை தந்தவர்கள், யாழ் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், இளம் துடிப்புமிக்க அரசியல்வாதியுமாகிய ரொஷான் அவர்களை சந்தித்தபோதும் இதையோத்த கேள்விகளும் விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
யாழ் முஸ்லிம்கள் சார்பாக அங்கு செயற்படும் இவ்வாறான சகோதரர்களிற்கு நாம் எமது பாராட்டையும் ஆதரவையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சியடைகிறோம். - Chief Editor (Jaffna Muslim Base )
No comments:
Post a Comment