
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான இறுதி பதிவுகள் தற்சமயம் இடம்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சவுதி தடுப்பு முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ரியாத் நகர செய்திகள் தெரிவிக்கின்றன.
உம்ரா, ஹஜ் ஆகியவற்றிற்காக சுற்றுலா விசாக்களில் சென்று விசா காலம் நிறைவடைந்த நிலையிலும் அங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பொது அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொது மன்னிப்பின் பின்னர் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த அறிவித்தலில் பின்னர் 25 இலங்கையர்கள் தங்களை பதிவு செய்துக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment