Wednesday, February 01, 2012

பாகிஸ்தானில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில்ஆளில்லா விமானத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா தான்: ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.




பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என்று முதன் முறையாக ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் அதிகமாக இருந்ததால் ஆளில்லாத விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது தாம் தான் என்றும், இது அமெரிக்காவின் சாதுரியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கூகுள் சமூக இணையத்தளத்தில் தோன்றிய ஒபாமா ஒரு மணிநேரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 1,300,000 கேள்விகளை நேயர்கள் அனுப்பியிருந்தனர்.
அவற்றில் தேவையானவற்றை மட்டும் கூகுள் பணியாளர் தேர்ந்தெடுத்து ஆறு பேர் மூலமாக அந்தக் கேள்விகள் ஒபாமாவிடம் கேட்கப்பட்டு நேயர்களுக்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இவர் பேட்டியளித்த வேளையில் துணை ஜனாதிபதியான ஜோ பிடெனும்(Joe Biden)மற்ற அலுவலக அதிகாரிகளும் ட்விட்டரில் இவரோடு இணைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment