Monday, February 06, 2012

நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59)



நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா...? எனக் கேட்கிறார்கள்(நபியே) நீர் கூறும்: ஆம்...! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)


(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)


மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)


வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)

No comments:

Post a Comment