“ஒக்டோபர்”. இலங்கையின் வட புல முஸ்லிம்களால் வாழ் நாளில் மறக்க முடியாத மாதம். தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய விடுதலை புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு வடக்கில் இருந்து அவர்களை வெளியேற்றிய கருப்பு மாதம்.
சிங்கள பௌத்த பெரும்பான்மையின் அடக்கு முறைக்கு எதிராக போராட முற்பட்ட தமிழர் தம்மை விடவும் சிறுபான்மையாக தம்முடன் வரலாற்றை பகிர்ந்து கொண்ட முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போது புலிகளின் பாசிஸ செயலிற்கு அரசியல் காரணம் கூறும் பாத்திரத்தையே வகித்தனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், மத குருக்கள், என பல மட்டத்திலும் புலிகளின் அராஜகத்திற்கு ஜனநாயக முலாம் பூசும் செயலிலேயே ஈடுபட்டனர். ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருந்துள்ளதையும் இங்கு ஒப்புக்கொள்ளல் வேண்டும்.
புலிகளால் வாழ்வினையிழந்து புத்தள உப்பு படுக்கைகளில் அகதிகளாக 20 வருடங்கைள வாழ்வினை கழித்த கொடுமை பற்றிய நினைவுகள் வடபுல முஸ்லிம்களின் மூச்சுக் காற்றுகளில் இப்போதும் உஷ்ண வரிகளை எழுதிச்செல்கின்றன.
ரவுப் ஹக்கீமின் பிரபாகரனுடனான சந்திப்பில் சுண்டல் சுற்றிய காகிதத்தில் எழுதிய ஒப்பந்தம் ஒன்றே முஸ்லிம்களின் வாழ்வியல் பாதுகாப்பு தொடர்பான சாஸனம் என்றால் மிகையில்லை. “மறப்போம் மன்னிப்போம்” என பிரபாகரன் முழங்க அன்டன் பாலசிங்கம் கோரஸாக குரல் கொடுக்க அதற்கு கைதட்டிய ரவுப் ஹக்கீ்மை என்னுகையில் “இஸ்ரேலை அங்கீகரித்த அரபு நாட்டு தலைவர்கள் கண் முன் வந்து நிற்கின்றனர்”.
புலிகள் தான் அழிக்கப்பட்டுள்ளார்களே தவிர அவர்களது தமிழ் குறுந்தேசியவாத பாசிஸ சிந்தனைகள் அழிக்கப்படவில்லை. அது உறங்கு நிலையில் இருக்கிறது. சந்தர்ப்பங்கள் இராணுவரீதியாக அல்லாமல் அரசியல்ரீதியாக சார்பாக மாறினாலும் தமிழ் இனவாத பூதம் மீண்டும் முஸ்லிம்களின் கதவுகளை தட்ட காத்திருக்கிறது.
முஸ்லிம்களுடன் வரலாற்றை பகிர்ந்துகொண்ட தமிழர்கள் பலர் இன்று மரணித்து விட்டனர். அதே போல தமிழர்களுடன் உறவாடிய முஸ்லிம்களும் மறைந்து விட்டனர். அடுத்த தலைமுறையே இன்று இரு தரப்பிலும் சமூக தலைமையை கையில் எடுத்துள்ளது. சில வாரங்கள் நான் யாழ்ப்பாணம் நின்ற அண்மைய நாட்களில் பல சமூக மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்பிலும் பண்பாட்டொழுங்கியல்களில் பின் தள்ளப்பட்ட சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் என யாழ்ப்பாணம் வேறு முகமூடியணிந்து நிற்கிறது. இந்த முகமூடிக்குள் தான் யுத்தத்தில் பாதிக்கப்படாத புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர்களும், முல்லிவாய்காலில் சேதமில்லாமல் வெளியேறிய புலிகளின் சைபர் குழு உறுப்பினர்களும் கலந்து நிற்கின்றனர்.
எந்தவொரு விடுதலை போராட்ட குழுவும் இலகுவில் அழிந்து போவதில்லை. இது புலிகளிற்கும் பொருந்தும். நிலப்பரப்புக்களை தக்கவைத்து நிர்வகிக்கும் ஆற்றலும், அவர்கள் தம் தலைமையும், இராணுவ கட்டமைப்புக்களும் தான் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தின் ஜீவன் அப்படியே நிற்கிறது. அதற்கு அதன் உடல் கிடைத்தவுடன் செயலில் இறங்க காத்திருக்கிறது.
சில வருடங்களி்ற்கு முன்பு அமெரிக்கா, பிரான்ஸ், அஜன்டீனா, ஜெர்மன், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பல வயது முதிர்ந்த கிழவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆம் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்வதே பொருத்தமானது. அவர்கள் வயது என்ன தெரியுமா? 95.96.97.98. இவற்றை செய்தது ஒரு கும்பல். “யூத ஸியோனிஸ்ட்கள்”. கொல்லப்பட்டவர்கள் யார் தெரியுமா? அடோல்ப் ஹிட்லரின் இராணுவத்தில் பணிபுரிந்த உயர்நிலை அதிகாரிகள். குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் அதற்கு டிமிக்கு கொடுத்து தப்பித்தவர்களும் இதில் அடங்குவர். கொலைகளுக்கான காரணம் என்ன தெரியுமா? “யூத படுகொலையில் பங்கு பற்றியவர்கள்” என்பதே. அதாவது ஒரு குற்றம் புரிந்த முன்னைய பரம்பரையை பாதிக்கப்பட்ட பரம்பரையின் வாரிசுகள் பழிவாங்குகின்றனர். கொலை செய்த இளைஞர்களின் வயது 24.27.28.30.
புரியுமென்று நினைக்கிறேன். புலிகளின் இராணுவ கட்டமைப்பும் தலைமையும் அழிக்கப்பட்டுள்ளது. அதாவது மரபு ரீதியான பண்பினை கொண்டவை இவை. நாளைய போராட்டத்தினை ஒரு லப்டொப்பில் கால எல்லைகளை வரையறுத்து டிசைன் பண்ணும் தமிழ் இளைய தலைமுறை உருவாகாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
தமிழர்கள் யூதர்கள் போன்றவர்கள். இப்போது கையறு நிலை. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தாங்கள் தோற்றுவிட்டதாகவும், இனி விடுதலை என்பது ஒரு கனவு என்றும், புலிகள் மடையர்கள் என்றும், அரசுடன் இணைந்து அபிவிருத்தி அடைய வேண்டும் என்றும் பொய்களை உண்மைகள் போல் கூறித்திரிகிறார்கள். நாளை இரண்டாவது தரம் சுதுமலையில் பிரபாகரனும், பிரவுண் ரோட்டில் கிட்டு மாமாவும் மீண்டும் வந்தால் மட்டுமே தெரியும் இவர்கள் யார் என்று.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது இப்போது “அகதி” எனும் அந்தஸ்த்தையும் இழந்த நிலையில் அரசியல் அநாதையாக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறி நிற்கின்றது. தலைமைத்துவ வழிகாட்டல்கள், சமூக ஒற்றுமை, பொருளாதார வளம், கல்வியறிவு என எதுவுமே இல்லாத சமூகமாக இந்த சமூகம் அரசியல் தேவைகளிற்காக அதன் நிகழ்ச்சி நிரலில் சேர்கப்பட்டு மீள்குடியேற்றப்படுகின்றது. இதையெல்லாம் தாண்டிய மார்க்கம் எனும் இஸ்லாமிய நடைமுறைகளிலும் இது தன்னை அந்நியப்படுத்தி நிற்கிறது.
அழிக்கப்பட்ட ஸ்டாலின்கிராட்டாகட்டும், சிதைக்கப்பட்ட வியட்நாமின் மேகாங்காகட்டும் சண்டை முடிந்தவுடன் மக்கள் குடியேறினர். இயல்பாக. ஏன் முல்லையிலும் கிளிநொச்சியிலும் குடியேறினர். இங்கே அந்த சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மீண்டும் வாழ்தல் எனும் இருப்பை தக்க வைக்க முற்பட்டனர். ஆனால் யாழின் நிலை கவலைதருவதாக உள்ளது. மக்கள் மீள குடியமர பின்னிற்கின்றனர். உயர்தர, நடுத்தர மக்கள் மீண்டும் குடியமர செல்லவில்லை. தொழிலற்ற சாரதாரண ஏழை குடும்பங்கள் மட்டும் நகர்ந்துள்ளன. இவர்களை வழிநடாத்தும் மாற்று சக்தி எது என இனம் காண முடியவில்லை. புலம்பெயர் உறவுகளினாலும், கொழும்புவாழ் உறவுகளினாலும் யாழ் முஸ்லிம்களின் இருப்பை வழிநடாத்தவும் முடியாது. பாதுகாக்கவும் முடியாது.
ஆக கருப்பு ஒக்டோபர்இவர்களிற்கு ஒவ்வொரு வருடமும் இருப்பின் நிலைத்தல் பற்றிய எச்சரிக்கை மணியாகத்தான் இருக்கப் போகிறது. ஆனால் முஸ்லிம்களை தாங்கள் வாழ்ந்த போது நிர்க்கதியாக்கி, தாங்கள் அழிந்த போதும் அதே நிலையை விட்டு மாறமுடியாமல் வைத்துள்ளனர் பாசிஸ புலிகள். மேற்குலகின் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி நாக்கு வரள கத்தி தங்கள் இரத்தம் தோய்ந்த முகங்களை அமைதிப்புறாக்களாக மாற்றிக் காட்டுகின்றனர் புலம்பெயர் பினாமி புலிகள். இந்த முறையும் கருப்பு ஒக்டோபர் முஸ்லிம்களின் முகவரியை தன் இருண்ட சிறகுகளால் மறைத்துகொண்டு அவர்கள் தலைகள் மேல் பறந்து செல்கிறது.
ABU MASLAMA
சிங்கள பௌத்த பெரும்பான்மையின் அடக்கு முறைக்கு எதிராக போராட முற்பட்ட தமிழர் தம்மை விடவும் சிறுபான்மையாக தம்முடன் வரலாற்றை பகிர்ந்து கொண்ட முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போது புலிகளின் பாசிஸ செயலிற்கு அரசியல் காரணம் கூறும் பாத்திரத்தையே வகித்தனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், மத குருக்கள், என பல மட்டத்திலும் புலிகளின் அராஜகத்திற்கு ஜனநாயக முலாம் பூசும் செயலிலேயே ஈடுபட்டனர். ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருந்துள்ளதையும் இங்கு ஒப்புக்கொள்ளல் வேண்டும்.
புலிகளால் வாழ்வினையிழந்து புத்தள உப்பு படுக்கைகளில் அகதிகளாக 20 வருடங்கைள வாழ்வினை கழித்த கொடுமை பற்றிய நினைவுகள் வடபுல முஸ்லிம்களின் மூச்சுக் காற்றுகளில் இப்போதும் உஷ்ண வரிகளை எழுதிச்செல்கின்றன.
முஸ்லிம்களுடன் வரலாற்றை பகிர்ந்துகொண்ட தமிழர்கள் பலர் இன்று மரணித்து விட்டனர். அதே போல தமிழர்களுடன் உறவாடிய முஸ்லிம்களும் மறைந்து விட்டனர். அடுத்த தலைமுறையே இன்று இரு தரப்பிலும் சமூக தலைமையை கையில் எடுத்துள்ளது. சில வாரங்கள் நான் யாழ்ப்பாணம் நின்ற அண்மைய நாட்களில் பல சமூக மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்பிலும் பண்பாட்டொழுங்கியல்களில் பின் தள்ளப்பட்ட சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் என யாழ்ப்பாணம் வேறு முகமூடியணிந்து நிற்கிறது. இந்த முகமூடிக்குள் தான் யுத்தத்தில் பாதிக்கப்படாத புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர்களும், முல்லிவாய்காலில் சேதமில்லாமல் வெளியேறிய புலிகளின் சைபர் குழு உறுப்பினர்களும் கலந்து நிற்கின்றனர்.
எந்தவொரு விடுதலை போராட்ட குழுவும் இலகுவில் அழிந்து போவதில்லை. இது புலிகளிற்கும் பொருந்தும். நிலப்பரப்புக்களை தக்கவைத்து நிர்வகிக்கும் ஆற்றலும், அவர்கள் தம் தலைமையும், இராணுவ கட்டமைப்புக்களும் தான் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தின் ஜீவன் அப்படியே நிற்கிறது. அதற்கு அதன் உடல் கிடைத்தவுடன் செயலில் இறங்க காத்திருக்கிறது.
சில வருடங்களி்ற்கு முன்பு அமெரிக்கா, பிரான்ஸ், அஜன்டீனா, ஜெர்மன், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பல வயது முதிர்ந்த கிழவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆம் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்வதே பொருத்தமானது. அவர்கள் வயது என்ன தெரியுமா? 95.96.97.98. இவற்றை செய்தது ஒரு கும்பல். “யூத ஸியோனிஸ்ட்கள்”. கொல்லப்பட்டவர்கள் யார் தெரியுமா? அடோல்ப் ஹிட்லரின் இராணுவத்தில் பணிபுரிந்த உயர்நிலை அதிகாரிகள். குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் அதற்கு டிமிக்கு கொடுத்து தப்பித்தவர்களும் இதில் அடங்குவர். கொலைகளுக்கான காரணம் என்ன தெரியுமா? “யூத படுகொலையில் பங்கு பற்றியவர்கள்” என்பதே. அதாவது ஒரு குற்றம் புரிந்த முன்னைய பரம்பரையை பாதிக்கப்பட்ட பரம்பரையின் வாரிசுகள் பழிவாங்குகின்றனர். கொலை செய்த இளைஞர்களின் வயது 24.27.28.30.
புரியுமென்று நினைக்கிறேன். புலிகளின் இராணுவ கட்டமைப்பும் தலைமையும் அழிக்கப்பட்டுள்ளது. அதாவது மரபு ரீதியான பண்பினை கொண்டவை இவை. நாளைய போராட்டத்தினை ஒரு லப்டொப்பில் கால எல்லைகளை வரையறுத்து டிசைன் பண்ணும் தமிழ் இளைய தலைமுறை உருவாகாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
தமிழர்கள் யூதர்கள் போன்றவர்கள். இப்போது கையறு நிலை. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தாங்கள் தோற்றுவிட்டதாகவும், இனி விடுதலை என்பது ஒரு கனவு என்றும், புலிகள் மடையர்கள் என்றும், அரசுடன் இணைந்து அபிவிருத்தி அடைய வேண்டும் என்றும் பொய்களை உண்மைகள் போல் கூறித்திரிகிறார்கள். நாளை இரண்டாவது தரம் சுதுமலையில் பிரபாகரனும், பிரவுண் ரோட்டில் கிட்டு மாமாவும் மீண்டும் வந்தால் மட்டுமே தெரியும் இவர்கள் யார் என்று.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது இப்போது “அகதி” எனும் அந்தஸ்த்தையும் இழந்த நிலையில் அரசியல் அநாதையாக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறி நிற்கின்றது. தலைமைத்துவ வழிகாட்டல்கள், சமூக ஒற்றுமை, பொருளாதார வளம், கல்வியறிவு என எதுவுமே இல்லாத சமூகமாக இந்த சமூகம் அரசியல் தேவைகளிற்காக அதன் நிகழ்ச்சி நிரலில் சேர்கப்பட்டு மீள்குடியேற்றப்படுகின்றது. இதையெல்லாம் தாண்டிய மார்க்கம் எனும் இஸ்லாமிய நடைமுறைகளிலும் இது தன்னை அந்நியப்படுத்தி நிற்கிறது.
அழிக்கப்பட்ட ஸ்டாலின்கிராட்டாகட்டும், சிதைக்கப்பட்ட வியட்நாமின் மேகாங்காகட்டும் சண்டை முடிந்தவுடன் மக்கள் குடியேறினர். இயல்பாக. ஏன் முல்லையிலும் கிளிநொச்சியிலும் குடியேறினர். இங்கே அந்த சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மீண்டும் வாழ்தல் எனும் இருப்பை தக்க வைக்க முற்பட்டனர். ஆனால் யாழின் நிலை கவலைதருவதாக உள்ளது. மக்கள் மீள குடியமர பின்னிற்கின்றனர். உயர்தர, நடுத்தர மக்கள் மீண்டும் குடியமர செல்லவில்லை. தொழிலற்ற சாரதாரண ஏழை குடும்பங்கள் மட்டும் நகர்ந்துள்ளன. இவர்களை வழிநடாத்தும் மாற்று சக்தி எது என இனம் காண முடியவில்லை. புலம்பெயர் உறவுகளினாலும், கொழும்புவாழ் உறவுகளினாலும் யாழ் முஸ்லிம்களின் இருப்பை வழிநடாத்தவும் முடியாது. பாதுகாக்கவும் முடியாது.
ABU MASLAMA
No comments:
Post a Comment