காலையில் வந்திறங்கிய பட்டதாரியும், கிராம சேவகரும் நேராக பள்ளிவாயலிற்கு சென்று தகறாரு செய்துள்ளனர். தாங்கள் நிர்வாக சபையின் அங்கத்தவர்கள் என்ற கோதாவிலேயே மேற்படி அராஜகம் நிகழ்ந்துள்ளது.
பள்ளியின் பேஷ் இமாம் பைசர் மொளவி அவர்களை அழைத்து உடனடியாக அவர் தங்கியிருக்கும் அறையை காலி பண்ணுமாறு கோரியுள்ளனர். “மற்ற அறைகளை செப்பனிட்ட பின் இதனை செய்யலாமே” என பைசர் (மதனி) கேட்ட போது, அவ்வாறு முடியாது தேவையானால் “லாட்ஜில்” தங்குங்கள் என வேறு கூறியுள்ளார் கிராம சேவகர்.
அதற்கு சரி, நான் இறையில்லத்தினுள் தங்கிக் கொள்கிறேன் நீங்கள் மேசனை அழைத்து உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என இணங்கி வந்துள்ளார் பைசர் (மதனி) அவர்கள்.
பள்ளிவாயலிற்கு பேஷ் இமாம் தேவை என ஏன் விளம்பரத்தினை பத்திரிகையில் வெளியிட்டீர்கள் என பைசர் மதனி கேட்டபோது ளுஹர் தொழுகை நடைபெறவில்லை என குற்றம் சுமத்தி எக்காளமிட்டுள்ளனர் இவர்கள். அது தான் உங்கள் பிரச்சனை என்றால் நான் பாடசாலையில் அனுமதி பெற்றாவது ளுஹரை நடாத்துகின்றேன் என பைசர் (மதனி) கூற இவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறாத ஏமாற்றத்தில் திரும்பி சென்று விட்டனர் இந்த இரண்டு குழப்பவாதிகளும்.
இரவு இஷா தொழுகையின் பின்பு நடைபெற்ற சகோதரர்களுடனான சந்திப்பில் மஹல்லாவாசிகள் இவ்விருவரினதும் அத்துமீறலை வன்மையாக கண்டித்துள்ளனர். அவ்வேளை போட்டோ எடுத்த பட்டதாரியை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் பைசர் (மதனி) அவர்கள். செயளாலர் சனுன் (மட்டன்) அவர்கள் ரெக்கோர்டிங் செய்வதை அவதானித்து சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் ரெக்கோர்டிங் செய்யப்பட்டதை மஹல்லாவாசிகள் அனுமதித்துள்ளனர்.
அதிபர் ஜலீல் அவர்களை ஏக வசனத்தில் “அடா” “புடா” என அழைத்து கேவலப்படுத்துவதில் தன்னை விஞ்ச யாரும் இல்லை என்பதை வித்தியாசமாக நிரூபித்துள்ளார் கல்விமானும், புத்திஜீவியும், அறிஞரும், நாகரீகம் தெரிந்தவர் என்றும் தனக்கு தானே சுய விளம்பரம் தேடும் அந்த பட்டதாரி.
ஜின்னின் மகனின் இந்த இழிவான, கீழ்த்தரமான நடத்தையையும், நடவடிக்கையையும் கண்டு இனியும் பொறுக்காத கூடியிருந்த மஹல்லாவாசிகள் அவரிற்கு எதிராக ஏகவசனத்தில் பரவலாக ஏச ஆரம்பித்தனர். உடனே பட்டதாரி பார்வையாளர்களை கேவலப்படுத்தும் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.
இவ்வளவையும் பார்த்துக்கொண்டு நின்ற மூன்றாம் தரப்பினர் பட்டதாரியை தாக்குவதற்கு முற்பட்டனர். பின்னர் இன்னும் சிலரால் அந்த தாக்குதல் முயற்ச்சி தடுக்கப்பட்டு அவர் பெரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் பாதுகாக்கப்பட்டார். பள்ளிவாயலின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பேடி போல் பதுங்கியிருந்த பட்டதாரியும்அவர் கூட்டாளியும் தப்பினோம் பிழைத்தோம் என்று வேன் ஒன்றில் பாய்ந்து ஏறி வெளியேறினர். 119 அவசர போலிஸிற்கும் பட்டதாரி அழைப்பு எடுக்க தவறவில்லை.
No comments:
Post a Comment