Friday, February 03, 2012

எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது




OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக   74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்துப்த்தின் உள்ள போர்ட் நகரில் உதைபந்தாட்ட அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதும் போட்டிக்கு ஏற்பாடாகியது அதன் ரசிகர்கள் மத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு மோதல் பெருந்திரளான மக்கள் மத்தில் பாரிய மக்கள் நெருசலை ஏற்படுத்தியுள்ளது இதில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர் .
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரசிகர்களிடையே உண்டான மோதல் எகி்ப்து உதைபந்தாட்ட வரலாற்றில் இது ஒரு மோசமான விளைவு என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்தின் மக்கள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போதும் கூட அமைதியான முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது , அந்த ஆர்பாட்டங்கள் கூட ஒரே நாளில் இந்த அளவு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்று எகிப்திய பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புக்கு இராணுவ நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளது . மோதலுக்கான காரணம் மற்றும் அதை தொடங்கி வைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது இது வரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அதேவேளை மிகவும் அமைதியான முறையில் எகிப்தின் புதிய பாராளுமன்றதிற்கான மேல் சபை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெற்றுவருகின்றது அதிலும் இஹ்வான்கள் முதல் தரத்திலும் சலபிகள் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகிறது.

No comments:

Post a Comment