இலங்கை அணியில்... இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா..? அமெரிக்க அணியில்...25-30 நாடுகள்
ஜெனீவாவிலுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தொலைபேசி ஊடாக இத்தகவலை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிக்காது என ஊடகங்கள் பல வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் இன்று.. ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கவுன்ஸிலின் 19வது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment