Sunday, February 05, 2012

பொம்மைவெளிக்கு மின்சாரம் - சொல்லாமுடியாத சங்கடங்கள்



மீண்டும் மின்னொளியில் மிளிருகிறது பொம்மைவெளி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சந்தடியில்லாமல் அமர்களமில்லாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது பொம்மைவெளிக்கான மின்சார விநியோகம். அல்ஹம்துலில்லாஹ்.
அமைச்சருடன் புகாரி அஹ்மட் சுல்தான் சுபியான் எனும் மாநகர சபை உறுப்பினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் முகத்தில் தெரிந்த சிரிப்பு அமைச்சர் மின்விநியோகத்தை ஆரம்பித்து வைக்க முன்பே பொம்மைவெளியை வெளிச்சப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சில இடங்கள் இருட்டாக இருந்ததாகவும், அந்த இருட்டிற்கு காரணம் ஏனைய நான்கு மாநகர சபை உறுப்பினர்களின் முகங்களில் காணப்பட்ட கருமைதான் எனவும் கூறப்படுகிறது. பிரதி மே. முகத்தில் மீலாதுந்நபி விழாவின் களைகட்டவில்லை என்பதும் வருத்தமான செய்தியே. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையிது என எமக்கு சோனகதெருவின் பெருசு சொன்னது வேறுவிடயம்.

No comments:

Post a Comment