துப்பாக்கிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளைத் தமது பிரிவுக்கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் பதிந்து கொள்ளுமாறு கோரும் அறிவித்தல்கள் ஏறாவூர்ப் பள்ளிவாசல்களில் நேற்று மாலை ஒலிபரப்பப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் காட்டு விலங்குகளிலிருந்து தம்மையும் தமது விவசாயத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கிகளைக் கோரி விண்ணப்பிக்க முடியும் என பகிரங்க அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.துப்பாக்கிகள் தேவைப்படும் விவசாயிகள் தத்தமது பிரிவுக் கிராம சேவகர்களிடம் விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகள் அனுமதிப் பத்திரத்துடனான துப்பாக்கிகளைக் கொண்டிருந்தார்கள். எனினும், பயங்கரவாத வன்முறைகளைக் காரணம் காட்டி விவசாயிகளிடம் இருந்த துப்பாக்கிகள் அரசினால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
ஏற்கெனவே துப்பாக்கிகளைக் கொண்டிருந்த மூத்த விவசாயிகளில் பலர் கடந்த முப்பது வருடகாலத்தில் மரணித்து விட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைப் புற விவசாயிகள் கடந்த பல வருடங்களாக யானைகளின் தொல்லைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துமுள்ளனர்.
விவசாயிகளின் பாதுகாப்ப கருதியே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment