Wednesday, March 14, 2012

2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்


 ஏ.அப்துல்லாஹ்-From Jaffna MOOR ST.[opp Sinna Palli]



அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ”சூரியதேவன்” வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயதுச் சிறுவன் புதல்வர் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் படங்கள் காட்டுமிராண்டித்தனமான படுகொலை செய்துள்ளது என்று புலிப் பினாமிகள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத தலைவன் ”சூரியதேவன்” இரண்டு சதாப்த காலமாக ஆடிய பயங்கரவாத தாண்டவத்தில் எத்தனை பிஞ்சுகள் சிதறிப் போயின, எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின. எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.


ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது.



”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பயங்கரவாதியின் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

ஏறாவூர் பிச்சிநகர் முஸ்லிம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் நடத்தியஇனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள். அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர். ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றார்கள் எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கு நிறைய விடைகள் உண்டு இங்கு விடைகளை தவிரித்து சில விபரங்களை பார்ப்போம் .

காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும், ஏறாவூர் கிராமங்களுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்த சிறுவர்களின் சில படங்கள் :

படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக பார்க்க முடியும்:


116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்

ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

எம். ஐ. ஜரூன் -(10 வயது)

எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது) 

எம். கமர்தீன் -(12 வயது)

எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

ஏ. எல். மக்கீன்-(12 வயது)

எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

எம். எஸ். பைசல்-(13 வயது)

எம். பீ ஜவாத்- (13 வயது)

யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

எச். எம். பௌசர்-(14 வயது)

ஏ. ஜௌபர்- (14 வயது)

எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

ஏ. சமீம்- (14 வயது)

எம். இஸ்ஸதீன்- (15 வயது)

எம். எம். எம். பைசல் -(15 வயது)

எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

No comments:

Post a Comment