Friday, March 30, 2012

2012ம் ஆண்டு மத்தியில் அனைத்து முன்னாள் புலி போராளிகளும் விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 384 பேர் இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கான விசேட நிகழ்வு இன்று (29) காலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. 

2,170 பெண்கள் உள்ளடங்களான 10,490 முன்னாள் புலி போராளிகளில் ஒரு வருடகால புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள்தாகவும் 2012ம் ஆண்டு மத்தியில் அனைத்து முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்படுவர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தினேஸ் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை. விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புதிய கடன் திட்டமும் இன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. 

புதிய கடன் திட்டத்தின்படி ஆகக்கூடிய 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். இவர்களுக்கு 4 சதவீத வட்டியே அறவிடப்படும். முதல் வருடத்தில் வட்டி மாத்திரமே அறிவிடப் படுவதுடன் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் இவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.
Thanks: Adadaruna

No comments:

Post a Comment