இன்று காலை தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்கா பாரபட்சமாக செயற்படுகிறது. இலங்கை விடயத்தில் ஒரு விதமாகவும் இஸ்ரேல் விவகாரத்தில் வேறொரு விதமாகவும் செயற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரனை கொண்டுவந்த அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக அதே பிரேரனை கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து விலகும் இஸ்ரேலின் திட்டத்துக்கும் ஆதரவளித்துள்ளது என்றும் கூறினார்.
அவ்வாறு இஸ்ரவேல் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியதுபோல் இலங்கை விலகுமா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகுவது தொடர்பாக எவ்வித தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றவில்லை என்றார்.
Thank: Meelparvai
No comments:
Post a Comment