YarlMuslimMedia - Australia
விடயத்துக்குள் வருவதற்கு முன்னர்.....
ஐ நா தீர்மானத்துக்கு வட பகுதி மக்கள் ஆதரவு…!!!
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார்.
அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் யாரின் நலனுக்காக?
1990 களில் தென்னிலங்கையில் யாராவது ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் பொது இடத்தில் தமிழ் வார்த்தையை ப்
பேசினாலே, அவர் சிங்களவர்களால் வெறுப்புடன் முறைத்துப் பார்க்கப்பட்டார்.
இன்றைய நாட்களில் தென்னிலங்கைச் சிங்களவர்களோ தமிழரை அல்லது முஸ்லீமைக் கண்டால் திக்கித்
திக்கி தமிழ் பேசி மகிழ்கின்றனர். இலங்கை நிறையவே மாறிவிட்டது.
தமிழர்களே இல்லாத ஊர்களிலெல்லாம் தமிழிலே பெயப்பலகைகள் காணப்படுகின்றன,
எழுத்துப் பிழைகளுடன்....விடயத்துக்கு வருவோம்.
மக்களுக்கு வெளிச்சம் தேவை,
திருடனுக்கோ இருட்டுத் தேவை என்பார்கள்.அதே போலத்தான்,இலங்கை மக்களுக்கு அமைதி தேவை,
அமெரிக்காவுக்கோ யுத்தம் தேவை.-
Yarl Mulim Media
தொடர்புடைய விடயங்கள்
கட்டாய ஆள்சேர்ப்பு உள்ளிட்ட சில விடயங்களை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்றாலும் அரசு தரப்புதான் அதிக அளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது என்று தமிழோசையிடம் தெரிவித்த ஒரு பெண்மணி, இனியாவது மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போர் முடிந்தும் வடக்கில் தொடர்ந்து அதிக அளவிலான இராணுவத்தினர் இருப்பதால் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை தம்மால் சுதந்திரமாக ஏதும் கருத்து கூற முடியவில்லை என்றும் வேறு சிலர் கூறினர்.
சிங்களவர் கருத்து
வவுனியாவைச் சேர்ந்த சிங்களவரான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்த பிரேரணை அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது என்றார். .
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தமிழ் மக்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் சிங்கள மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி பேசுவதற்கு எவருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நீதி வழங்குமாறு கேட்பதற்கும் எவருமில்லை. யுத்த காலத்தில் பௌத்த குருமார்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது கொலைக்குக் காரணமானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு நீதி வழங்குவதற்குத்தான் எவருமில்லை” என்றார் அவர்.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் திரளாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி பெரும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்னும் இரண்டு நாட்களில் ஜெனீவாவில் விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமக்கு சார்பாக தேசிய உணர்வுகளை முன்னெடுத்து வரும் அரசின் தொடர்ச்சியான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய விடயங்கள்
அரசுக்கு ஆதரவாக புத்தபிக்குகள் தொடர் பிரார்த்தனைகளையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சுயாதீனமான நம்கத்தன்மையுடன் கூடிய வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ நாவின் மனித உரிமைக்கள் குழுவின் கூட்டத்தில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு பலனைத் தருமாயின் அதை ஆதரிக்க சித்தமாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது பற்றி தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளையும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டுள்ளன.
ஊடகங்கள் கருத்து
இந்தியாவின் முடிவானது இலங்கை அரசுக்கு ஒரு பேரிடியாக வந்துள்ளது என்று தென்னிலங்கை ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஒரு முன்னணி ஆங்கில நாளேடான ஐலண்ட, குட்டையை குழப்பும் இந்தியா என்கிற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. கடந்த வாரம் எந்த நாட்டுக்கும் எதிரான ஒரு தனிப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என்று தெரிவித்த வேளையில், தற்போது இப்படியான ஒரு நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்தியா கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்ப்பார்த்தோம் என்று கூறியுள்ள ஐலண்ட், மனித உரிமைகள் மீறல் விஷயத்தில் இந்தியா இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது எனவும் சாடியுள்ளது.
இந்தியாவின் உண்மையான நோக்கம் என்ன எனவும் ஐலண்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மற்றொரு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் இன்றைய வெளியீட்டின் முதல் பக்கத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை உருவகப்படுத்தி ஒரு கேலிச்சித்திரம் வரைந்துள்ளது.
அதில் இந்தியப் பிரதமர் தனது தலைப்பாகையை கழற்றிவிட்டு அமெரிக்க அரசின் கொடி பொறித்த குல்லாவை போட்டுக் கொண்டிருப்பதாக கேலிச்சித்திரம் போடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தோல்வியுறச் செய்யும் அரசின் முயற்சிகளுக்கு இந்திய முடிவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் டெய்லி மிரர் கூறுகிறது.
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தோல்வியுறச் செய்யும் அரசின் முயற்சிகளுக்கு இந்திய முடிவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் டெய்லி மிரர் கூறுகிறது.
இதே போன்று பல சிங்கள நாளிதழ்களும் இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து செய்திகளை வெளியிட்டு தலையங்கமும் எழுதியுள்ளன.
ஆனால் இலங்கையிலிருக்கும் தமிழ் ஊடங்கள் இது தொடபில் பெரும்பாலம் மௌனமே சாதித்துள்ளன.
ஐ தே க வின் நிலை என்ன?
இலங்கை அரசு அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. ஆளும் கூட்டணியில் பங்குபெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அரசுக்கு ஆதாவான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஆட்சிக்கு தலைமையேற்றிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த்து.
No comments:
Post a Comment