யாழ் சோனகதெருவை சேர்ந்த ரபீக் என்பவரிற்கு நிகழ்ந்த வேதனை மிகு அநுபவம் இது. ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ளது M.O.வின் வீடு. அவர்களின் வீட்டிற்கு முன்பாக ஒரு வளவு உள்ளது. புளியமரங்கள் நிறைந்த வளவு. சுல்தான் எனும் யாழ்வாசி அதனை பாதுகாத்து வந்தார். அதனை M.O.வின் வளவு என சொல்வார்கள். அதை அடுத்து இரண்டு வீடு தள்ளி கதீஜா பெண்கள் பாடசாலை உள்ளது. இந்த வளைவை எடுத்து பயிற்சி பாசறை அமைக்க புலிகள் முயன்றார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். முயன்றது. டெலோவும் முயன்றது. கடைசியில் வரதராஜ பெருமாள் அதில் கலாச்சார மண்டபம் அமைக்க முயன்றார். அது பழைய கதை. விடயத்திற்கு வருவோம்.
இந்த வளவிற்கு பக்கத்து வீடு. வெடிக்காக்காவின் வீடு. நாட்டுப்பானை சரீப்காக்காவின் தங்கச்சிக்கு சொந்தமான வீடு. இதை இவர்கள் புலிப் பயங்கரவாதத்தின் வலியை தாங்க முடியாமல் ஏதோவொரு அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்கள். வாங்கியவர் ஒரு மறத்தமிழர்.
அந்த வீட்டையே “வீடு வாடகைக்கு” என அறிவித்திருந்தார் வீட்டின் சொந்தக்காரர். ரபீக்கும் அவர் உறவினரும் வீட்டை அவர் கூறிய வாடகைக்கு எடுக்க தயாரானார்கள். அப்போது தான் உரிமையாளர் கூறினார், “ இந்த வீட்டில் நான் ஒரு சாமியறை அமைத்துள்ளேன். அந்த படங்களை நான் அகற்ற மாட்டேன். அதே போல நீங்களும் அந்த படத்திற்கு நாள் தவறாமால் துப்பரவு பண்ணி விளக்கேற்றி கற்பூரம் கொளுத்த வேண்டும். அப்படியென்றால் வீட்டை தருகிறேன். முடியாதென்றால் எனக்கும் முடியாதுதான். தரமாட்டேன்”
அதிர்ந்து போனார் நம்மவர். முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டு வந்து விட்டார். அவரின் ஈமானை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். அவர் உறவினர் ஈமானையும் தான்.
சகோதரர்களே சிந்தியுங்கள்!... யாரின் வீட்டை யார் வாங்கி யாருக்கு சாமிக்கு விளக்கேற்ற சொல்வது?. இந்த தமிழரின் வார்த்தையில் எமக்கு இரண்டு விடயங்கள் பற்றியே முடிவிற்கு வர முடியும். முதலாவது இவர் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மாற்றும் மதமாற்றத்தில் பகிரங்கமாக ஈடுபடுகிறார். இரண்டாவது முஸ்லிம்களிடம் வாங்கிய வீட்டில் கூட ஒரு முஸ்லிம் இருக்கக் கூடாது. அதிலும் ஒரு தமிழர் தான் இருக்க வேண்டும் எனும் துல்லியமான இனவாத சிந்தனைக்குட்பட்டவராக உள்ளார்.
![]() |
| This is the house, where the Tamil Occupied and demanded to worship Hindu Gods |
இரு ஒரு உதாரணம் தான். சிறு சாம்பிள் தான். இது போல நூறு சாம்பிள்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கோணத்தில். ஒவ்வொரு வடிவத்தில். ஒவ்வொரு தருணத்தில். நாம் என்ன செய்யப்போகிறோம்?
“நேற்று தேசிய வளங்களை கொள்ளையிடும் இரும்பு வியாபாரிகள் என்றார்கள். கள்ள மாட்டிறைச்சி என்றார்கள். காக்கா வடமராட்சியில் கைது என்றார்கள். இன்று சாமியறையில் விளக்கு வைத்தால் வீடு என்கிறார்கள்”
புரிகிறதா எங்கள் நிலை. நாம் கடத்தப்படுகிறோம். கலாச்சாரங்களால் கடத்தப்படுகிறோம். பணத்தால் கடத்தப்படுகிறோம். சில பொழுதுகளில் இன்றியமையாத தேவைகளால் கடத்தப்படுகிறோம்.
நாளைய சோனக தெருவில் அந்நிய மதத்தினரின் பெரிய காணிகளில் அடுக்குமாடி வீடுகள் வரும். அதில் ஒரு கோயிலும் வரும். சில வேளை மினி சேர்ச்சும் வரும். சாயிபாப பஜனை என்றும், ஸ்ரீ ராம பஜனை என்றும், இராமகிருஷ்ண மிஷன் என்றும் குட்டி குட்டியாய் தியானஸ்தலங்கள் முளைக்கும். பின்பு கோயில் முளைக்கும். கும்பாபிஷேகம் நடக்கும். வெண்கல மணி கணீரென்று சோனக தெருவெங்கும் கலகலப்பாய் கேட்கும். நாய்கள் உரிமையுடன் நெஞ்சு நிமிர்த்தி நடக்கும். ஒரு சில பன்றிகள் கூட படுத்துக்கிடக்கும். இதரை வாழைப்பழம் விற்ற கடைகள் கதலி வாழைப்பழம் விற்கும்.
அந்த தெருவில் முல்லைத்தீவை பார்க்கச் செல்லும் சிங்களவன் போல நானும் நீங்களும் நடந்து செல்லலாம். நடு வீதியில் வரும் தமிழர்களின் வளர்ப்பு நாய்களிற்கு வழிவிட்டு...

No comments:
Post a Comment