Wednesday, March 07, 2012

யாழ்ப்பாண தமிழ் இனவாதத்தின் குரல்



யாழ் முஸ்லிம் இணையத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது இது தான். “யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் அல்லாதவர்களிற்கு மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள செயற்திட்டம் வகுக்கப்படுகிறது”. அந்த கட்டுரையை வாசிப்பதற்குhttp://www.jaffnamuslim.com/2012/03/blog-post_128.html எனும் லிங்கை சொடுக்கவும்.

இந்து பொத்த சங்கம் என்ற ஸ்விற்சர்லாந்தில் உள்ள அமைப்பின் தலைவர் தர்மலிங்கள் லோகேஸ்வரன் என்பவர் அதை எதிர்த்து சட்டநடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறியுள்ளார். முஸ்லிம்கள் செய்வது கட்டாய மதமாற்றம் எனும் கருத்தை மற்றவர் மனதில் விதைக்கும் விதமாக அவர் அறிக்கை காணப்படுகிறது. அவரது குற்றச்சாட்டுக்களிற்கு எதிரான சரியான பதிலை உடனடியாகவே  யாழ் முஸ்லிம் இணையம் கொடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
யாழ்ப்பாண தமிழர்கள் விடுதலை போராட்டம் என்ற பெயரில் இழந்தது அதிகம். அவர்களின் கனவு கோட்டைகள் எல்லாம் தவிடு பொடியானது தான் மிச்சம், உயிரை இழந்து, உறவுகளை இழந்து, சொத்து சுகங்களை இழந்து, இழப்பதற்கு எதுவுமேயில்லை என்ற நிலையில் நிம்மதியை தேடி அலையும் தமிழ் சமூகமே இன்று குடாநாட்டில் பரவலாக காணப்படுகிறது. அந்த மக்களின் தேடலின் விளைவே இஸ்லாம் நோக்கிய முன்நகர்வுகள் ஆகும்.

இஸ்லாத்தை நாடி வருபவர்களிற்கு இஸ்லாத்தை கற்பிப்பதும், அதனை கற்றவர்களிற்கு வாழ்வதற்கான வழிவகைகளை காட்டிக்கொடுப்பதும் நம் கடமை. அந்த கடமை பற்றிய செயற்திட்டமே பகிரப்பட்ட விடயம்.

யாழ் தமிழ் ஊடகங்களும் பல வழிகளிலும் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன. வடமராட்சியில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டதற்கு “காக்கா கைது” என எழுதும் அளவிற்கு முஸ்லிம்களின் மீதான காழ்ப்புணற்ச்சி கொடி கட்டிப் பறக்கிறது.

இலங்கைக்கும் முழு உலகிற்கும் இஸ்லாம் வந்ததே அவர்களின் நடத்தையினாலும், இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதினாலுமாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களிற்குள் பரம்பரை பரம்பரையாக சண்டையிட்டதனை போல முஸ்லிம்கள் தங்களிற்குள் சண்டையிடவில்லை. அவர்களின் ஒற்றுமை, கண்ணியம், நேர்மை போன்ற பல காரணிகளால் அந்நிய மதத்தின் இஸ்லாத்தை நேசித்ததே வரலாறு.

கொலைகாரர்களாகவும், கடத்தல்காரர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும், கப்பம் கேட்பவர்களாகவும், காட்டி கொடுப்பவர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், இன்னொரு இனத்தின் மீது அநியாயத்தை ஏவிவிடுபவர்களாகவும், அந்த அநியாயத்தை செய்த அக்கிரமக்கார கும்பலை மானசீகமாக ஆதரிப்பவர்களாகவும் ஒரு இனம் இருக்குமென்றால் இந்த பண்புகள் அனைத்தையும் கண்டிப்பதோடு தண்டனையும் வழங்கும் மார்க்கம் இஸ்லாம். இவற்றை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அந்த வகையில் நாம் இவர்களிற்கு இஸ்லாத்தை சொல்லி சீர்திருந்திய மனிதர்களாக மாறுங்கள் என அழைப்பதன் பெயர் தான் கட்டாய மதமாற்றம் என்றால் அதை கட்டாயம் நாம் செய்ய தயங்க மாட்டோம்.

அந்த அறிக்கையில், “முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் மார்க்கரீதியில் ஒழுகுவதை நாம் தடுக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மறுவார்த்தையில் சொல்வதென்றால். எங்களால் தடுக்க முடியும். தேவையானால் தடுப்போம் எனும் எச்சரிக்கை அதில் கலந்திருப்பதை காணமுடியும். ஒரு தமிழ் இனவாத பேயின் அட்டகாசத்தால் தான் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னொரு இனவாத பிசாசின் கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சிக்கப்போவதில்லை. அதன் கரங்களை தரிப்பதே உசிதமானது.

No comments:

Post a Comment