Thursday, March 08, 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் - யாழ் முஸ்லிம் சம்மேளனம் சிகரங்களை நோக்கி..



சென்றான்-கண்டான்-வென்றான். இந்த வரலாற்று வார்த்தைகளிற்கு சொந்தக்காரன் அலெக்ஸாண்டர்.  மாவீரன் அலெக்ஸான்டர்.

சென்றான்-கண்டான்-வென்றான். இந்த வரலாற்று வார்த்தைகளிற்கு சொந்தக்காரன் ஜெங்கிஸ்கான். தாத்தாரிய தலைவன் ஜெங்கிஸ்கான்.

சென்றான்-கண்டான்-வாங்கினான். இந்த நில ஆக்கிரமிப்பு வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் யாழ்ப்பாண தமிழ் மற்றும் கத்தோலிக்கர்கள்.

இன்னொன்றையும் சொல்லலாம். அது என்ன தெரியுமா?...

ந்தான்-விற்றான்-சென்றான்இந்த வரலாற்று வார்த்தைகளிற்கு சொந்தக்காரன் சோனவன். யாழ்ப்பாண சோனவர்.

முன்பு தமிழர்கள் புனாய் டெக் வாங்கவும், சிட்டிஷன் வோட்ச் வாங்கவும்,  வேட்டியில் காசை கட்டிக்கொண்டு வருவார்கள். இப்போது சோனக தெருவை வாங்க அதே வேட்டியினுள் காசை கட்டிக்கொண்டு வருகிறார்கள். போகிற போக்கில் கிறடிட் காட்டிற்கும் 03 மாத செக்கிற்கும் தமிழர்களிற்கு காணிகளை விற்கும் இழி ஜென்மங்களாக சோனவர்கள் மாறிவிடுவார்களோ என்ற பயம் எம்மை என்னெல்லாமோ செய்கிறது.

ஆம் 2011ன் முற்பகுதியில் யாழ் முஸ்லிம் சம்மேளனம் மேற்கொண்ட காணிகள் தொடர்பான மதிப்பீட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் நம்மிடம் கொள்முதல் செய்த காணி நிலங்கள் 200. அதேவேளை 2012ன் முற்பகுதியில் பெறப்பட்ட தரவுகள் 400 என எம்மை மிரட்டுகின்றன. யாழ் சோனக தெருவின் மொத்த நிலப்பரப்பில் 20%. அதாவது 5 முஸ்லிம் வீடுகளிற்கு ஒரு தமிழ் வீடு என்ற நிலைதான் தற்போதைய நிலைமை.நாளை இது ஐந்து பள்ளிவாசல்களிற்கு ஒரு கோயிலாகவோ சர்சாகவோ கூட இந்த நிலை மாறலாம்.

20%. தமிழர்கள் இப்போது சோனக தெருவை சட்டரீதியாக ஆக்கிரமித்துள்ளார்கள். அதே வேளை மிகுதி 80%. முஸ்லிம்கள் சோனக தெருவில் குடியிருக்கவில்லை. அவர்களில் ஒரு பகுதியினரே யாழ்ப்பாணத்தில் குடியிருக்கிறார்கள். யாழ்ப்பாண சோனக தெருவினுள் குடியிருக்கும் முஸ்லிம்கள் தற்போது மிகச் சிறுபான்மையினரே. அதாவது சோனக தெருவில் பல முஸ்லிம்களுடைய வீடுகள் யாருமே இல்லாத நிலையில் இருக்கும் போது யாரெல்லாம் முஸ்லிம் காணிகளை வாங்கினார்களோ அந்த தமிழ் கத்தோலிக்கர்கள் அந்த வீடுகளை சும்மா பூட்டி வைக்கவில்லை. அதில் குடும்பமாக வசிக்கிறார்கள். பல வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட தமிழ் அல்லது கிறிஸ்தவ குடும்பங்கள ஒரு வீட்டினுள் வசிப்பதும் கவனிக்கத்தக்கது.


அவர்கள் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை என சிதறி வாழ்கிறார்கள். தற்போதைய நிகழ்கால நிலையில் யாழ்ப்பாண சோனக தெருவில் குடியிறுக்கும் தமிழ் மற்றும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 70%  மாகவும் மாறி நிற்கிறது. மிகுதி 30% முஸ்லிம்களே யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ளனர். அவர்களில் 05% நிலையாக யாழ்ப்பாணத்தில் குடும்பமாக குடியிருக்கவில்லை. வெளிமாவட்டங்களில் உள்ள தங்கள் குடும்பங்களிற்கு சென்று வருபவர்கள். அப்படியானால் நிலையாக இருக்கும் முஸ்லிம்களை மட்டும் வைத்து பார்த்தால் சோனக தெருவில் முக்கால்வாசி தமழிர்கள் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

விகிதாசார ரீதியில் ஒப்பிடும் போது முழு இலங்கையிலும்  20%. இருந்து கொண்டு தான் தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக நாட்டை இந்த கலக்கு கலக்கினார்கள். இப்போது ஏறத்தாள அதே அளவில் அவர்கள் சோனக தெருவினுள் ஒரு மினி இஸ்ரேலாக உருவெடுத்துள்ளார்கள். நிதி வளங்களில் அவர்கள் முஸ்லிம்களை விடவும் பலமானவர்கள். கல்வியறிவிலும் அவர்கள் யாழ் வாழ் முஸ்லிம்களை விடவும் பலமானவர்கள். அரச சேவைகளிலும் அவர்கள் முஸ்லிம்களிலும் பலமானவர்கள். ஆயுத பயிற்சியிலும் அவர்கள் முஸ்லிம்களை விட பன்மடங்கு பலமானவர்கள். முஸ்லிம்களிடம் ஆயுத பயிற்ச்சி என்பது இல்லை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தான் உண்மை நிலை. இது தான் இன்றைய சோனகதெரு. புல்லரிக்கவில்லையா உடம்பு? சிலிர்க்கவில்லையா மேனி? பிசையவில்லையா இதயம்? கசியவில்லையா கண்ணீர். இதில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் இல்லையென்றால் நாம் யாழ்ப்பாண சோனவர்தானா? என்பதில் கேள்விகள் எழுகின்றன எமக்கு.

பணம் படைத்த தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களின் மேய்ச்சல் வெளி சோனக தெரு என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இந்த புலனாய்வு தகவல்களை தந்த உத்தியோகத்தர்கள் யார் தெரியுமா? புரோக்கர்கள். தூய தமிழில் சொன்னால் “தரகர்கள்”. கொங்கு தமிழில் சொன்னால் “தரகப்பெருமக்கள்”.

இன்று காலை யாழ் முஸ்லிம் சம்மேளனம் தனது சந்திப்பினை நடாத்தியுள்ளது. எமக்கு கிடைத்த தகவல்களின் படி சில முக்கியமான விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. பொம்மை வெளி வீட்டுத்திட்டம் தொடர்பான விவகாரங்கள் ஆராயப்பட்டு, அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. பின்னர், அரசாங்க அதிபரின் பதில் கிடைக்கும் வரை பார்த்திருப்போம் என முடிவாக்கப்பட்டுள்ளது.

“மீலாத் விழா” என சம்மேளனம் கூற மறுக்கும் “யாழ் முஸ்லிம்களின் ஒன்று கூடல்” தொடர்பான நிகழ்தகவு மதிப்பீடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

அஞ்சா நெஞ்சன் அப்துல் காதரின் தொல்லைகள் பற்றியும் கருத்தாடப்பட்டு அவர் யார் என்பதை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என ஆராயப்பட்ட வேளை, அஞ்ஞா நெஞ்சன் அப்துல் காதரின் தொடர் தாக்குதலிற்கு இலக்கான சகோதரர் முபீன் எழுந்து “அந்ந விடயத்தை பெரிதாக அலட்ட வேண்டாம். அவனை நான் இறைவன் பொருப்பில் பாரம் சாட்டி விட்டேன். அதற்கான தண்டனையை இறைவனே கொடுப்பான். எனது பாவங்களை அவன் சுமந்து கொண்டு எனது பாவங்களை கழுவியும் விட்டான்” என குட்டி பயானே நிகழ்த்தி முடித்துள்ளார். மன்னிப்பது என்பதே மிகப்பெரிய தண்டனை. சகோதரர் முபீனின் இந்த மனமாற்றத்தை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அத்துடன் மார்க்கம் தொடர்பான அவரது ஈடுபாட்டையும் சந்தோஷமாகப் பார்க்கிறோம்.

தமிழர்களிற்கு காணிகளை விற்றல் எனும் பிரச்சனையின் விஸ்வரூபங்கள் பற்றி மிக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. காணி விற்பதனை எவ்வாறு தடுக்கலாம் என பல வழி வகைகள் குறித்தும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. காலம் பிந்திய சிந்தனை என்றாலும் ஒரு கண்ணே குருடாகியுள்ளது. குறைந்த பட்சம் மற்றைய கண்ணாலாவது சூரியனை பார்க்கலாம். அந்த வகையில் சம்மேளனம் எடுத்த முடிவுகள், தீர்மானங்கள் குறித்து அவர்களை முழு மனதுடன் பாராட்டுகிறோம்.

முஸ்லிம்களது காணிகள் பறிபோவது தொடர்பாக, அதை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் சில ஆராயப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ்ப்பாண சோனவ தெருவை பங்கு போட்டு விற்றுக்கொடுக்கும் தரகர்களை அழைத்து அவர்களிற்கு பிரச்சனையின் தன்மைகளை எடுத்து விளக்குவது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களான புத்தளம், இக்கிரிகொல்லாவ, நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை போன்ற பகுதிகளிற்கும் சென்று காணிகளை விற்க வேண்டாம் எனும் கருத்தரங்குகளை நடாத்துவது போன்ற போன்ற அவசர நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்த சம்மேளனம் அதற்னான வேலை திட்டங்களை அவசரமாக முடுக்கி விட்டுள்ளது.


இன்றைய தினம் இஷா தொழுகைக்கு பின்பு சோனக தரகர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் காணிகளை அந்நியர்களிற்கு விற்க வேண்டாம் எனும் செய்தி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தரகர்கள் சுமார் 37 பேர் தமிழர்களிற்கு காணிகளை விற்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது அதிர்சி தரும் விடயாமாகும். அதில் ஒரு தரகர், தான் மட்டும் சுமார் 50 இற்கும் மேற்பட்ட வீடுகளை அந்நிய மதத்தினரிற்கு விற்று கொடுத்ததாக தனது பட்டியலை சொல்லியுள்ளார். மேலும் தன் கைவசம் 66 வீடுகளிற்கான கேள்வி உள்ளதாகவும் கூறியுள்ளார். இன்னொரு தரகர் தன் கைவசம் 90 வீடுகள் உள்ளதாக பெருமிதப்பட்டுள்ளார். முன்னையவர் சச்சின் டென்டுல்கர். பின்னையவர் பிறையன் லாரா. தங்கள் ரெக்கோர்ட்களை சொல்லும் இலட்சணம் இது.



யாழ் முஸ்லிம் சம்மேளனத்தின் ஆக்கபூர்வமானதும், உடனடியாக செயலில் இறங்கியதுமான நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும், சில நம்பிக்கைகளை உள்ளத்தே ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இவை சோனவ தெருவின் சின்ன சின்ன சந்தோஷங்கள். இன்ஷாஅல்லாஹ் இவர்களது முயற்சியின் பலனாய் பெரிய பெரிய சந்தோஷங்களையும் நாம் காண இறைவனை இறைஞ்சுவோம்.

No comments:

Post a Comment