By:Adaderana
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணைக்கு எதிராக மலேசியா வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது.
மலேசிய வெளிவிவகார அமைச்சின் முக்கிய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஐநாவில் இலங்கையை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை மலேசியா எடுத்துள்ளதென மலேசியாவின் ஐநா விசேட பிரதிநிதி பரம் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை சரியாகப் புரிந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் கொண்டு வருவதால் ஒன்று நடக்காது. அது ஒரு பலவீனமான தீர்மானம். கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை எப்படி சுயாதீன விசாரணைகளை நடத்தும்? இலங்கை அதனை புறக்கணிக்கும். என மலேசியாவின் ஐநா விசேட பிரதிநிதி பரம் குமாரசுவாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment