Thursday, March 22, 2012

பிக்குகள் கொலையுடன் தொடர்புபட்ட இரு பிரதான சந்தேகநபர்கள் கைது

கோட்டே ரஜமகா விகாரையின் பிக்குகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பிக்குகள் கொலையுடன் தொடர்புபட்ட இரு பிரதான சந்தேகநபர்கள் கைது 

இவர்களில் ஒரு சந்தேகநபர் இன்று (22) அதிகாலை தனமல்வில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிக்குகள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் கொலையுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர்கள் என அவர் குறிப்பிட்டார். 

மரிஹாண பொலிஸ் நிலைய விசேட பிரிவினரால் இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை சம்பவம் தொடர்பில் நேற்றும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
adaderana

No comments:

Post a Comment