Saturday, March 03, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சார்பாக களமிறங்கும் தமிழ்ப் பெண்



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக, அரசாங்கம் நியமித்திருக்கும் விசேட இராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஜெனிவாவிலுள்ள ஐ.நா.விற்கான இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

இந்நிலையில், இன்று தொடக்கம் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திரக் குழுவிற்கு தலைமை வகிக்கும் இவர் மூலம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளதாகவும், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அங்கீகாரம் கிடைக்குமென அரசு நம்புவதாகவும் மூத்த அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.விற்கான இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகம் 7 சர்வதேச மொழிகளில் பாண்டித்தியம பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment