மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ளா பிரதமர், வெளிநாடுகள் சொல்வதற்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இந்த பரிந்துரைகளை மூன்று விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பந்துரைகளில் எதனை நடைமுறைப்படுத்துவது இவைகளை நடைமுறைப்படுத்துவதால் இலங்கைக்கு ஏற்படும் நன்மை தீமை மற்றும் இதன் மூலம் சர்வதேசத்துடன் எவ்வகையில் தொடர்புகளை பேணுவது என்பனவே அந்த மூன்று விடயங்களாகும்.
இவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னரே ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல் படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிலாபம் மாதம்பை பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்துள்ளார் .
Thanks: LankaMuslim
No comments:
Post a Comment