நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் இன்று கிழக்கு மாகாண சபைக்கு விவாதிற்கு எடுக்கபட்டபோது குறித்த திருத்தச் சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையால் ஏகமனதாக நிராகரிகப்பட்டுள்ளது. நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் இன்று மார்ச் 20 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்படது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் அனைத்து ஆளும் தரப்பு , எதிர் தரப்பு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அரசாங்கத்தின் திருத்தம் கோரும் சட்ட மூலம் நிராகரிக்கபட்டது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் சற்று முன்னர் lankamuslim.org க்கு தெரிவித்தார் .
எதிர்காலத்தில் இவ்வாறான திருத்தச் சட்ட மூலம் மத்திய அரசாங்கத்தினால் திருத்தங்களுக்கு உட்படுத்தி மீண்டும் மாகாண சபை கொண்டுவரப் படுவதையும் தாம் நிராகரிப்பதாக மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் தெரிவித்தார் . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஏனைய கட்சிகளும் இணைந்து இதத்தை ஏகமானதாக நிராகரித்துள்ளன .
ஆனால் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தினால் குறித்த சட்ட மூலம் திருத்தங்களுக்கு உட்படுத்தி மீண்டும் மாகாண சபை கொண்டுவரப் படும் பச்சத்தில் அது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நிலைபாட்டை கொண்டுள்ளது .
No comments:
Post a Comment