Friday, March 23, 2012

அமெரிக்க தீர்மானத்தில் இந்தியாவின் தலையீடு: திடுக்கிடும் தகவல் அம்பலம்

ஐநா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் இந்தியா தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவாக இரண்டு முக்கிய பரிந்துரைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என ஆதார பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியா, இலங்கை போன்ற ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் செயல்பாட்டில் பாதகத்தை ஏற்படுத்த விரும்பாத காரணத்தினால் இந்த மாற்றத்தை செய்யுமாறு இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. 

இதற்கு ஐக்கிய அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்து மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது. 

இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. 

இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது. 

அதாவது ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முதல் நாள் மார்ச் 7ஆம் திகதி வைத்த தீர்மான அறிக்கை இறுதி நாள் வாக்கெடுப்பின் போது இரண்டு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா முன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தது. பின்னதாக மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

.
adaderana

No comments:

Post a Comment