Thursday, March 15, 2012

வட மாகாண முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக யூ.என்.எச்.சீ.ஆர். வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்


 வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம் மற்றும் ஏனைய இடங்களிலும் வசித்து வருவோர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று குடியேறும் பொழுது, தமது சொந்த காணிகளை பெறுவதிலும்,வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தனிகராலயத்தின் இலங்கை வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜே. ஸவாக்கை சந்தித்து நீதியமைச்சரும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விளக்கியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (12.03.2012) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தத்தினால் வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் இன்னும் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளினதும்மீள் குடியேற்றப்படுவோரினதும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி யூ.என்.எச்.ஸீ.ஆர் வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஜே ஸவாக்குக்கு எடுத்துரைத்தார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் கோர விளைவினால் அகதிகளாக அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாதுமேற்கு நாடுகளில் புகலிடம் (தஞ்சம்) கோருவோரின் தொகையும் பெருகியுள்ளதாகவும் கூறிய அமைச்சர்தடுப்பு முகாம்களில் எஞ்சியுள்ளோரினதும்மீள் குடியேற்றப்படுவோரினதும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய உகந்த தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோரின் புகலிட கோரிக்கைகளின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2008 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் உள்ளக இடம்பெயர்ந்தோரின் குடும்ப எண்ணிக்கை 24,368என்றும்தனி நபர்களின் எண்ணிக்கை 85, 241 என்றும் குறிப்பிட்ட அகதிகள் உயர்ஸ்தானிகர் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி 2008 ஏப்ரல் மாதத்தின் பின்னர் அத்தகையோரின் எண்ணிக்கை16,316 குடும்பங்களாக குறைந்து விட்டதாகவும் தனி நபர்களின் எண்ணிக்கை 47, 604 ஆக வீழ்ச்சியடைந்ததாகவும்  கூறினார்.
சர்வதேச மட்டத்தில் யுத்தம்இயற்கை அனர்த்தம் போன்ற சூழ்நிலைகளில் பாரிய உதவிகளை வழங்கி வரும் யூ.என்.எச்.சீ.ஆர். நிலைமையை பொறுத்து சோமாலியாஎத்தியோப்பியாகென்யா போன்ற நாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த நேர்ந்ததாக அவர் கூறினார்..
meelparvai

No comments:

Post a Comment