Thursday, March 22, 2012

மாலியில் புரட்சி; அரசை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவத்திலிருந்து பிரிந்துசென்ற சிப்பாய்களைக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.

மாலியின் அரசியலமைப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிறுவனங்கள் கலைக்கப்பட்டள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் இன்று தொலைக்காட்சி மூலம் அறிவித்தனர். இக்கிளர்ச்சியாளர்கள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கான தேசிய குழு என தம்மை அழைத்துக் கொள்கின்றனர்.

முhலியின் நாட்டின் வடபகுதியில் இடம்பெற்றுள்ள கிளர்ச்சியயை அடக்குவதற்கு அரசாங்கம் வலுவற்றிருந்தால்  இப்புரட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
தலைநகர் பமாகோவிலுள்ள ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அமைச்சர்கள் பலரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சர் சௌமேய்லோ பௌபேயே மைகா மற்றும் உள்துறை அமைச்சர் கபௌஹோனா கோனே ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். 

இதேவேளை, ஜனாதிபதி அமாடோ டௌமானி டோரே ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சுயாதீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment