“கடந்த 28-ம் தேதி 30 பேர், சிங்கப்பூர் அருகே, கோலாலம்பூரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஜொகுர் நாட்டில் கம்பம்புங்கை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் இலங்கையர்கள்” மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரேணுகா டி பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.இவர், இவ்வாறு சட்டவிரோதமாக குடியேற முனைகின்ற மக்களின் வழக்குகளை கடந்த காலங்களில் நடாத்தியவர் ஆவார்.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற இவர்கள், தற்போது கோட்டுத்திங்கி போலீஸ் தலைமையகத்தில் சிறைச்சாலையில் 14 நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் இல்லாத நிலையில் வரும் 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இவர்களின் கைது தொடர்பாக, இலங்கைத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதென்றாலும்.
ஐநா மனித உரிமை அமைப்புக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என ரேணுகா பாலசுப்பிரமணியம் கூறினார்.
சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை 14 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்ப தூதரகம் ஏற்பாடு செய்தால், அதற்கு மலேசியா அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது
மலேசியாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகவும் வழக்கறிஞர் ரேணுகா தெரிவித்தார்.
No comments:
Post a Comment