Wednesday, April 04, 2012

பளை- காங்கேசன்துறை இடையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்






இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் 146 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பளை- காங்கேசன் துறை இடையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையிலான சுமார் 56 கிலோ மீற்றர் பாதை புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கென தென்னிலங்கையிலிருந்து கனரக வாகனங்களில் கொண்டுவரப்படும் தண்டவாளங்கள் பளை தொடக்கம் சேமிக்கப்பட்டு வருகின்றது.
இதேபோன்று யாழ்.பிரதான ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மருதனார் மடம், கோண்டாவில் ரயில் நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனோடு மிருசுவில், சாவகச்சேரி ரயில் நிலையங்களின் பழைய கட்டிடங்கள் இடித்தழிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலம் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் முடிக்கப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஏ9 வீதியின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
TamilWin

No comments:

Post a Comment