யாழ் மாவட்டத்தில் உணவுக்கால்வாய் புற்றுநோய் அதிகரித்துள்ளது என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளர் விஜித்தா சத்தியகுமார் தெரிவித்தார். நேற்று சேதனப் பசளை விற்பனை நிலைய திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமாக கூட்டுப்பசளை தயாரிப்பு முறை மேற்கொள்ளப்படுகின்றது. இச் சேதனப்பசளைகளை பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மாசடையாமல் பாதுகாக்க முடியும் அத்துடன் மண்ணையும் வளப்படுத்திக் கொள்ளமுடியும்.
திண்மக்கழிவுகளை அகற்றுவது உள்ளுராட்சி மன்றங்களின் பிரதான கடமை. பொது மக்கள் கழிவுகளை சரியாக தரம் பிரித்துக்கொடுக்கும் பட்சத்தில் இலகவாக கழிவுகளை அப்புறப்படுத்த முடியும். கழிவகற்றும் நடவடிக்கைகள் கொழும்பு, கண்டி மாநகர சபைகளில் குறிப்பிட்ட அளவுக்கு நடமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. என்று மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment