Wednesday, April 11, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படும் நேரம்



ஏ.அப்துல்லாஹ்: தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக விரைவில் பிளவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், தலைமையில் ஒன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் ஒன்றும் என்று ஆரம்ப பிளவு ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைபின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.
புலிகளின் சிந்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட புலித் தமிழ் தேசியவாதம் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் அதேவேளை தமிழ் தேசியம் என்பதில் மிதவாதம் காட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலும் பிளவு படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது .
சிவஞானம் சிறிதரன்
புலித் தமிழ் தேசியவாதம் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் அடிக்கடி கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிக்காமல் கூட்டம் கூடுவதாக தெரிவிக்கப்படுகிறது கடும் புலித் தமிழ் தேசியவாதம் கொண்ட சிவஞானம் சிறிதரன் ஒரு பாட்டதாரியாவார் இவர் கிளிநொச்சியைப் பூர்வீகமாக் கொண்டவர்.
வன்னியில் நடந்த உக்கிரமான போரில் இறுதி வரை அங்கு இருந்தவர் கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயம் பாடசாலை உட்பட கிளிநொச்சியில் உள்ள பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றியவர். இவர் மிகவும் தீவிர போக்கு கொண்டவர்.
2008ஆம் ஆண்டின் முதல் முதல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சிக் கிளை தபால் பிரிவின் செயலாளராக கடமையாற்றியுள்ளார் . 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தபால் பொதியுடன் வவுனியா வந்தார். பின்னர் தடுப்பு முகாமிலும் தங்கி வாழ்ந்தவர் புலம் பெயர் தமிழர்களிடம் வேகமான செல்வாக்கை பெற்று வருபவர். இவரின் தீடீர் வளர்ச்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலரினால் ஏற்றுகொள்ளமுடியவில்லை உள்ளக முரண்பாடுகள் தற்போது வலுவடைந்து வருகின்றது
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையை தொடர்ந்தே கட்சிக்குள் பிளவு அதிகரித்து வருகிறது . தற்போது அது வெடிக்கும் நிலையை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment