சுங்க சட்ட விதிமுறைகளை மீற இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் விசேட பிரிவு மற்றும் தேடுதல் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் கொள்கலன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரு பெஜிரோக்கள், ஓட்டப்பந்தயக் கார் மற்றும் பிரிதொரு மோட்டார் வாகனம் என்பவை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் பெறுமதி 200 லட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதாகக்கூறி இவ்வாறு ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
வாகனம் இறக்குமதி செய்தால் அதிக வரி செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதுபோல் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment