இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடைய முன்னாள் முஸ்லிம் சேவைப்பணிப்பாளரும் இன்னாள் சந்தைப்படுத்தல் முகாமையாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான சகோதரர் நூறானியா ஹசன் அவர்களுடைய அகாலமரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் அனுதாபமும் அடைந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ்; தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினுடைய முன்னாள் முஸ்லிம் சேவைகள் பணிப்பாளர் இன்னாள் சந்தைப்படுத்தல் முகாமையாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான அல்ஹாஜ் நூறானியா ஹசன் அவர்கள் மிகச் சிறப்பாக மிகத் துடிதுடிப்பான ஒரு உத்தியோகத்தர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை மிகவும் பொறுப்புள்ள ஒரு நிறுவனமாக, குறிப்பாக முஸ்லிம் சேவையினுடைய நேரங்கள் அதிகரித்து முஸ்லிம் சேவையை மிகச் சிறப்பான ஒரு சேவையாக ஆக்குவதிலும் அதை வர்த்தக ரீதியிலே ஒரு நல்ல சேவையாக மாற்றுவதிலும் அது பொதுமக்களுக்கும் நேயர்களுக்கும் மிகச் சிறப்பான சேவையை வழங்குவதிலும்; மிகவும் அரும்பாடுபட்ட ஒருவர்.
என்னுடைய காலத்திலே இரவு பகலாக பாடுபட்டு, இலங்கை வானொலியின் வளர்ச்சிக்காக உழைத்தவர். சகோதரர் ஹசன் அவர்களுடைய திடீர் மரணச்செய்தி கேட்டு நான் மிகவும் ஆழ்ந்த கவலையும் அனுதாபமும் அடைகின்றேன். அல்லாஹூத்தஆலா அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவருக்கு சொர்க்கத்தில் அவரது ஹப்றை சொர்க்க பூஞ்சோலையாக ஆக்குவதற்கு இச்சந்தர்ப்த்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் பிரார்த்திக்கின்றேன்.
அவருடைய சேவைகள் அவர் ஆரம்பித்து வைத்த பணிகள் குறிப்பாக முஸ்லீம் சேவையை விரிவுபடுத்துவதிலும் மிகச்சிறப்பான சேவையை அதநூடக நேயர்களுக்கு வழங்குவதிலும் அதை வர்த்தக ரீதியிலே ஒரு வெற்றிகரமாக நடத்துவதிலும் மிகப்பெரும் பணியாற்றியவர். சகோதரர் ஹசன் அவர்கள். ஆகவே அவருடைய பணி; தொடர்ந்து மிகசிறப்பாக நடைபெற நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ்; தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.