இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளர் ஹைரத்அல் ஷாதிர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியற்றவர் என ஜனாதிபதித் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த தீர்மானத்தை எதிர்த்து ஹைரத் அல் ஷாதிர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டினை ஜனாதிபதித் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்ததன் மூலம் அவரின் அரசியல் உரிமை மீண்டும் ஒரு முறை பறிக்கப்பட்டுள்ளது என சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் சட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் முக்தார் அஷ்ரி தெரிவித்தார்.
முன்னணி சட்டவியலாளர்களின் உதவியுடன் சட்ட ஆலோசனைக்குழு ஹைரத் அல் ஷாதிர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியானவர் என்பதை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களை சமர்ப்பித்திருந்த போதும் தேர்தல் ஆணையம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் ஆணையம் இவ்வாறு ஆதாரபூர்வமான சான்றுகளை நிராகரித்ததன் மூலம் சட்டவிதிகளை முழுமையாக மீறியுள்ளது. ஹைரத் அல் ஷாதிர், அபூ இஸ்மாஈல், அய்மன் நூர் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை எகிப்திய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் மறைமுக கரங்களின் செல்வாக்கு காணப்படுவதையே தெளிவாகக் காட்டுகின்றது.
Meelparvai
Australia
Meelparvai
Australia
No comments:
Post a Comment