Friday, April 27, 2012

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்!- யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல்தாக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.
பெருமெடுப்பில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர  தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உணர்ந்து கொண்டு அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பெருமளவு முஸ்லிம் மக்கள் வளாகத்தை விட்டு வெளியேறி வீதியில் இறங்க முயன்றபோதும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்,
TW


No comments:

Post a Comment