Wednesday, April 11, 2012

குடிவரவு சட்டத்தை மீறியதால் குணரத்ணம் நாடு கடத்தப்பட்டார் - இலங்கை விளக்கம்

குடிவரவு சட்டத்தை மீறியதால் குணரத்ணம் நாடு கடத்தப்பட்டார் - இலங்கை விளக்கம்
முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் நாட்டின் சகல தூதுவராலயங்களுக்கும் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. 

குமார் குணரட்னம் நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் நடத்தப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு, நாட்டின் இயங்கி வரும் சகல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 

கடத்தல் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதம் 7ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் கடத்தப்பட்டதாக் குறிப்பிடப்பட்ட போதிலும் மாலை4.10 அளவிலேயே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குமார் குணரட்னம் கடந்த ஐந்து மாதங்களாக நாட்டில் சட்டவிரோதமான முறையில் வசித்து வந்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Thanks - Adadaruna

No comments:

Post a Comment