Wednesday, April 11, 2012

அஷ்ஷஹீத் உஸாமா மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடம் தொடர்பான புதிய வீடியோ



OurUmmah: அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ள பங்களா வீட்டுவீடியோ ஒன்றை அல்அரபியா தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. இஸ்லாமபாத்தில் புறநகரப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகளும் குழந்தைகளுமாக 8 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் வசித்த குற்றத்துக்காக மூன்று மனைவிகள், மற்றும் இரண்டு மகள்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஒன்றரை மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது அந்த தண்டனையை அவர்கள் குறித்த பங்களாவில் அனுபவித்த பின்னர் நாடுகடத்தப் படலாம் என்று நம்பப்படுகிறது. பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மனைவியரில் இருவர் சவுதி பிரஜைகள். ஒருவர் யெமன் நாட்டவர் ஆவார்.
 அதேவேளை இவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை இருப்பதால் இவர்களை பாகிஸ்தானில் தங்கியிருக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரும் சட்ட முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது.

Al Arabiya video shows Bin Laden’s widows in their detention place

Thanks : Lanka Muslim 

No comments:

Post a Comment